Tuesday, June 9, 2009

தந்தைமை

தந்தைமை (FATHERHOOD)

நமது தற்போதைய வாழ்க்கை முறை பெருமளவில் மாறி விட்டது. அதிக நேரத்தை தொழிலிலும், வேலையிலும் செலவிட வேண்டிய தேவை பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிள்ளைகளுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான நேரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பின் அவசியம் பற்றி எழும் கேள்விகள் நமக்கும் உரிய கேள்விகளாகின்றன.

NRCACHBL1BCA4R1LDKCAQ4WWWQCADYZBFDCALO17WQCA0I1AJ2CATP49A8CA1CDWBZCAA4THKGCA0DG0N3CA7HGN1VCAHXIW20CAE5VCUZCAMJWF33CA9YZJCLCAVH9U21CAI02G31CALCNDAACA0PKABP

தாய்மை என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கின்றோம். அது மிகவும் பெருமைப்படுத்தப்படுவதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் தந்தைமை என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிகுக்கிறோமா என்றால் அதிகம் இல்லை என்றே பதில் கூற வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ப்பில் தந்தைக்குரிய பங்கு பற்றி நாம் ஏன் அதிகம் சிறப்பித்துப் பேசுவதில்லை ? பிள்ளை வளர்ப்பில் தந்தைக்கு பெரிய பங்கு எதுவும் இல்லையா?

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் தந்தையின் பங்களிப்பு குறைந்ததாகவே உள்ளது. இதற்கு தந்தை குடும்பத்திற்காக உழைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதே காரணமாக இருக்கலாம். முந்தைய காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் அவர்களே பிள்ளைகளுக்கு பாலூட்டி, தாலாட்டி, அரவணைத்து வளர்ப்பதுடன் வளர வளர அவர்களது சக தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் பொறுப்பையும் செய்து வந்தனர். இதனால் பிள்ளைகளுக்கு தந்தையைவிட தாயிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டது.

பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கைக் கூற தமிழில் இரண்டு பழமொழிகள் உள்ளன. "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது ஒன்று. பிள்ளைகள் தந்தை கூறுவதைக் கேட்டு நடந்தாலே நல்ல முறையில் வளர்வார்கள் என்ற கருத்து முன்னர் இருந்தது. பிள்ளைகள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வழிகாட்டுபவர் தந்தையே. எனவே அவரின் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு மந்திரம் போன்றவை என்ற கருத்தினாலேயே இந்த பழமொழி தோன்றியிருக்க வேண்டும்.

"தந்தையுடன் கல்வி போகும்" என்பது மற்றொரு பழமொழி. அதாவது தந்தையின் மறைவுடன் பிள்ளைகளின் கல்விக்கு வழிகாட்டுதல் போய்விடும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து. பண்டைய நாட்களில் பெண் கல்வி என்பது அதிகம் இல்லாத காரணத்தால் இந்தப் பழமொழி தோன்றியுள்ளது. இன்று நிலைமை பெருமளவில் மாறி பெண்கள் பல துறைகளில் கல்வி கற்றிருந்த போதும் குடும்பத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதால், தந்தையிடமே கல்விக்கு வழிகாட்டல் என்ற பொறுப்பு இன்றும் உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உரிய முறையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தந்தைக்கு உள்ளது.

a

கல்வியில் மட்டுமல்ல, தந்தை என்ற முறையில் பிள்ளைகளின் வாழ்வில் பல வழிகளில் பங்கு கொள்ள வேண்டிய தேவை தந்தைக்கு உள்ளது. வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் செய்ய வேண்டிய வேளைகளில் தந்தைமை (FATHERWOOD) நிலையே முக்கியமானது. தாய் பிள்ளை உறவு நீண்ட காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. தந்தையாக இருக்கும் நிலை கூறப்படுவது சமீபகாலத்திற்குரியது.

வளரிளமைப் பருவ (Adolescent) பிரச்சனைகளான பள்ளிப் படிப்பில் பின் தங்குதல், மன ஆரோக்கியம் குன்றுதல், தாழ்வுணர்ச்சி ஏற்படுதல், பிறருடன் பழகுவதில் தயக்கம், குற்றம் புரிதல் போன்றவற்றிற்கு தந்தை அருகில் இருந்தும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுவதில்லை என்பதையே காட்டுகிறது. பிள்ளைகளுடனான உறவின் இயல்பைப் புரிந்து அவர்களின் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதே இதற்குத் தீர்வாகும் பொதுவாக தந்தை பிள்ளைகளோடு தினசரி மிகக்குறைந்த அளவு நேரத்தையே செலவழிக்கின்றனர். இது அதிகரிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுடன் நேரத்தை கழிப்பதற்கு நிறைய திட்டமிடல் அவசியமாகிறது. வாரத்தில் ஓரிரு நாட்கள் பிள்ளைகளுடன் கழிக்க சில மணி நேரம் ஒதுக்க நாம் பழக வேண்டும்.

ஒருவர் எவ்வாறு சிறந்த தந்தையாக இருக்க முயற்சிக்கலாம்? தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது. பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளுடன் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் தடுமாற வேண்டிய அவசியம் இருக்காது. பிள்ளைகளுக்கு கதை சொல்வது தந்தையின் முக்கிய கடமைகளில் ஒன்று.

பிள்ளைகளுக்கு கதை கூறும் நேரத்தில் நமது சிறிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அவ்வாறு கூறுவதன் மூலம் தமது குடும்ப வரலாறு, பெருமைகள் வாழ்க்கைச் சூழல், பண்பாடு ஆகியன பற்றிய விஷயங்களை பிள்ளைகள் அறியும் படி செய்யலாம். இது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதுடன் தாங்கள் எதிர் காலத்தில் செய்ய வேண்டிய முடிவுகள் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்தித்து உணர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

12084407045KF7w8

சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது. சிறுவயதில் இவ்வாறான அன்பான வளர்ப்பையும் உணர்வு பூர்வமான ஆதரவையும் பெறாவிட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளிடமிருந்து தந்தையும் அதை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படும் போது வெளிப்படையாக அழவும், அதனை நம்மிடம் சொல்லவும் தைரியம் கொண்டவர்களாக வளர்வதில் தந்தையின் அன்பான வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொண்டு தந்தை தனது அனுபவங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும் ஏற்படுத்த இயலும், நட்பும், ஆதரவும் சரியான வழிகாட்டுதலும் அளிக்கும் தந்தையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும்.

நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

20 ஜுன் தந்தையர் தினம்

- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

31 comments:

 1. \\நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். \\

  நல்ல சொல்.

  ReplyDelete
 2. வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள்\\

  கவணமாக கவணிக்க வேண்டிய விடயம்.

  ReplyDelete
 3. அற்புதமான பதிவு. அழகான படம் :-)

  ஜோவைக் கண்டிப்பாக வாசிக்கச் சொல்லவேண்டும் இந்தப் பதிவை.

  நேஹாவைப் பொறுத்த வரையில் அவளுக்குப் பொறுமையாகச் செய்யும் வேலைகள் - நகம் வெட்டி விடுவது, காதுகளில் அழுக்கெடுப்பது, இரவில் உணவூட்டி விடுவது, அவளுடன் விளையாடுவது, அமர்ந்து ரைம்ஸ் சிடி பார்ப்பது என்று அததனையும் அவள் அப்பா தான்.

  ReplyDelete
 4. அற்புதம். தந்தையர் தினம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்...

  இனி..என்ன எழுதுவது என்று தெரியவில்லை அப்படி எழுதி விட்டீர்கள்..

  ReplyDelete
 5. அவசியமான மற்றூம் அழகான பதிவு...

  ReplyDelete
 6. அழகான பதிவு சார்.

  ReplyDelete
 7. //ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும். நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.//

  அருமை வாசு.. நல்ல பதிவு..;-)

  ReplyDelete
 8. "நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்."

  ரொம்ப சரியான வரிகள் !

  ReplyDelete
 9. வாசு. கலக்கல்.

  பேரண்ட் கிளப் பிளாக்கில் பதிய அனுமதி தேவை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. //ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும். //

  அருமையான பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 11. நல்ல பதிவு.

  \\நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். \\

  இது இருவருக்குமே பொருந்தும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. தலைவரே... அருமை.. அருமை.. வேற என்ன சொல்வது..

  ReplyDelete
 13. இரசித்துப் படித்தேன்!

  ReplyDelete
 14. உன் தந்தை சொன்னது சரி என்று நீ உணரும்போது...நீ சொல்வது தவறு என்று கூறும் மகன் வருவான்..........
  யாரோ சொன்னது....

  ReplyDelete
 15. கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி
  கருப்பொருள் செறிவு குறைவதே இல்லை
  எதை எழுதினாலும் .

  எனது
  ஒரு பழைய கவிதை நினைவுக்கு வருகிறது தோழரே

  "பெரிதுவக்கும் தருணத்திற்காய் திணிக்காதீர்
  தேவரீர்
  நொதித்த உம் கனவுகளை

  கருவிழியும் ரேகையும் மட்டும் அல்ல
  இன்ன பிறவும் உண்டு

  தோள் மாற்றி வைக்காதீர் சிலுவைகளை
  கனவுகள் பரம்பரை நோயல்ல....

  எமது சிறகுகளுக்கு சிக்கெடுக்கும் அவசரத்தில்
  எமது பால்யம் சிதைவுறாதிருக்கட்டும்

  பிரியத்தை பகிர்வது பரிசுப்பொருள் அல்ல
  அண்மை

  பெரிதுவக்கும் தருணத்திற்காய் திணிக்காதீர்
  தேவரீர்
  நொதித்த உம் கனவுகளை "
  ௧௨.0௮.1997

  -நேசமித்ரன்

  ReplyDelete
 16. நல்ல பதிவு வாசு சார்.
  நிச்சயம் நீங்கள் கூறும் ஒவ்வொன்றும்
  தகப்பனானவன் வாழ்க்கைப் படுத்த வேண்டியவை!

  மிக நல்ல பதிவு.

  ReplyDelete
 17. //ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும்.

  நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்//
  நல்ல பதிவு வாசு பாராட்டுகள் நானும் இதைப்பற்றி சொல்ல வேண்டும் என்று இருந்தேன். நீங்கள் மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.... தந்தையர் தின வாழ்த்துகளுடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 18. நல்ல பதிவு.
  நுட்பமான பகிர்வுகள்.

  ReplyDelete
 19. நல்ல கட்டுரை அகநாழிகை
  :)
  நன்றி

  ReplyDelete
 20. நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் மிக மிக உண்மை. ஒரு நல்ல அப்பா கிடைப்பது குழந்தையின் பூரண வாழ்க்கைக்கு மிக அவசியம். நான் நெருக்கமாய் உணர்ந்த வரிகள்...

  // சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது.

  தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும்.

  தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது.//

  ReplyDelete
 21. அருமையான பதிவு.மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 22. பதிவில் உங்க அப்பாவையும் உங்களையும் பார்த்தேன், அன்று இரவு நீங்க உங்க அப்பா பத்தி சொல்லிக்கிட்டிருந்தீங்க இல்ல, அதெல்லாம் ஞாபகம் வந்திடுச்சி,

  மிகவும் உணர்வு பூர்வமா பதிவு செய்திருக்கீங்க, நான் நேரில் பார்த்த வாசு என்கிற தந்தைமையைத் தான் பதிவிலும் பார்த்தேன்.

  ReplyDelete
 23. நல்ல பயனுள்ள கட்டுரை அகநாழிகை.

  ReplyDelete
 24. ஒரு தந்தையானவன் பணம் சம்பாதித்துப்போடும் இயந்திரமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்பதை அழகாக கூறியுள்ளீர்கள். பல தந்தையர்கள் பெருமையாகக்கூட சொல்லிக்கொள்வார்கள்.. என் பையன் என்ன படிக்கிறான்னே எனக்குத் தெரியாது. எல்லாத்தையும் என் மனைவியே பார்துக்கொள்வாள் என.
  அற்புதம்.

  ReplyDelete
 25. அருமையான பதிவு... மானுடவியல் சார்ந்த உங்களின் அனைத்து பதிவுகளும் வியப்பூட்டுகின்றன

  ReplyDelete
 26. அழகான மற்றும் அவசியமான பதிவு
  வாசுதேவன் சார்

  ReplyDelete
 27. வணக்கம். நல்ல கருத்துக்கள். ஒரு தாயாரால் பரிவையும், பாசத்தையும் மட்டுமே காட்ட முடியும். அவரால் தன் பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடக்க முடியாது. தந்தையார் தன் பாசத்தால், அக்கறையுடன் கண்டிப்பையும் கலந்தே காட்டுவதால், ஒரு வேளை தந்தைமை-யின் சிறப்பு வெளிச்சத்திற்கு வராமல் இருக்கலாம். தாய் ஒருவரை நல்ல மனிதராக்கலாம். ஆனால், பிள்ளைகளின் வாழ்வியல் வெற்றிக்கு (அல்லது தோல்விக்கு) என்னைப் பொறுத்த வரையில், ஒரு தாயை விட, ஒருவரின் முழுமையான வெற்றிக்கு பெரும்பாலும் (இன்றைய காலங்களிலும்) தந்தையே காரணம் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 28. @ நட்புடன் ஜமால்
  மிக்க நன்றி ஜமால்.

  @ தீபா
  நன்றி தீபா.

  @ நர்சிம்
  ஊக்கத்திற்கு நன்றி.

  @ டக்ளஸ்
  நன்றி டக்ளஸ்

  @ வித்யா
  மிக்க நன்றி வித்யா

  @ கார்த்திகைப்பாண்டியன்
  வாழ்த்திற்கு நன்றி கார்த்தி

  @ பிஸ்கோத்துப்பயல்
  (தட்டிச்சிடவே சங்கடமாக இருக்கிறது)
  நன்றி.

  @ வண்ணத்துப்பூச்சியார்
  நன்றி சூர்யா. பேரண்ட்ஸ் கிளப்பில் பதிந்து கொள்ளுங்கள்.

  @ சாதிக் அலி
  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

  @ அமிர்தவர்ஷினி அம்மா
  மிக்க நன்றி

  ReplyDelete
 29. @ கேபிள்சங்கர்
  தல நன்றி நன்றி நன்றி வேறென்ன சொல்ல.

  @ பழமைபேசி
  மிக்க நன்றி பழமைபேசி.

  @ தண்டாரோ
  நன்றி நண்பரே.
  நீங்கள் கூறுவதும் சரிதான்.

  @ நேசமித்ரன்
  உங்கள் வருகையும் ஊக்கமும் மகிழ்வூட்டுகிறது.
  மிக்க நன்றி.
  உங்கள் கவிதை அருமை.

  @ T.V.Radhakrishnan
  மிக்க நன்றி T.V.R.

  @ ஆ,முத்துராமலிங்கம்
  மிக்க நன்றி நண்பா.

  @ ஆ.ஞானசேகரன்
  நண்பா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  @ மாதவராஜ்
  நன்றி தோழர்.

  @ அய்யனார்
  வருகைக்கும் வாழ்த்திற்கும்
  நன்றி அய்யனார்.

  @ சுகிர்தா
  வருகைக்கும், பகிர்விற்கும் மிக்க நன்றி சுகிர்தா.

  @ மணிநரேன்
  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

  @ யாத்ரா
  ரொம்ப சந்தோஷம் மாப்ளை.

  @ கோகுலன்
  மிக்க நன்றி கோகுலன்.

  @ உழவன்
  கருத்துப் பகிர்விற்கு நன்றி உழவன்.

  @ கௌரிப்ரியா
  வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  @ குமாரை நிலாவன்
  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

  @ விதூஷ்
  வருகைக்கும் புரிதலோடான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. தரமான கட்டுரை. தந்தைமை பற்றி இன்னும் விரிவாக பேசப்பட வேண்டும்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname