Tuesday, February 7, 2012

கடைசிக் கோமாளி


இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றை தெறிக்க
மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக
இருளுக்கேங்கும் கண்கள் விரித்து
பெருஞ்சேனத் தொனி காட்டி
விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற
பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன்

வண்ணத் தொப்பி
வெண்பனி பூசிய முகம்
தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை
பிளந்த யோனியாய் செவ்வாய் நீள் வரைவு

கை முனையில் சர்ப்பக்குஞ்சுகளாய் தொங்கும் நாடா

அர்த்தமற்ற அசைவுகளால் நெளிகிறது உடல்
சன்னதங் கொண்டு...

காது நிறைக்கும் கைதட்டல்கள்
மகிழ்வோலங்கள்...

அகண்ட திரைச் சீலையின் பின்னுள்
உச்ச நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்
மூர்க்கங்கொண்ட சிங்கத்தின் வாயில்
தலை நுழைத்து சாகசம் புரிபவன்.



பொன்.வாசுதேவன்




2 comments:

  1. romba alaga varnithulirgal sir romba pidichuruku செங்குமிழ் மூக்கன் arumaiyana varnipu

    ReplyDelete
  2. கவிஞர் வாசுவின் அடர்த்தி தெரிகிறது... :)

    (Hello நாங்களும் சீரியஸா எழுதுவோம்... ஆனா சீரியஸா திங் பண்ணமாட்டோம்)
    * hello, serious, think - சத்தியமா எங்க ஊர்ல இது எல்லாம் தமிழ் வார்த்தைகள் தான்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname