மெல்லிய காற்றாடை மரங்களைப் போர்த்தியபடி
அமைதியுற்றிருக்கிறது காடு
சதை நீங்கி முறிந்த எலும்புக் குவியம் சூழ
கருஞ்சிகப்பு ரத்தம் தோய்ந்த
நீள் நாக்கைச் சுழற்றிச் சுவைத்தபடி
நடுச்சுனையின் ஓரம் ஓய்ந்திருக்கிறது பசியாறிய புலி
தலையுயர்த்தி செவ்வாய் பிளந்து
இரையாடி கூர் தீட்டிய பற்களுக்கிடையே
அமர்ந்து பறந்தமர்ந்து
வேடிக்கை பார்க்கிறது காட்டு ஈ.
•
பொன்.வாசுதேவன்
Good One Vasu ! :)
ReplyDeleteவிலங்குகளின் பசியாரலைக் கூட அருமையாக
ReplyDeleteசொல்லிபோகிறது வரிகள்