Tuesday, February 7, 2012

பசியாறல்


மெல்லிய காற்றாடை மரங்களைப் போர்த்தியபடி
அமைதியுற்றிருக்கிறது காடு

சதை நீங்கி முறிந்த எலும்புக் குவியம் சூழ
கருஞ்சிகப்பு ரத்தம் தோய்ந்த
நீள் நாக்கைச் சுழற்றிச் சுவைத்தபடி
நடுச்சுனையின் ஓரம் ஓய்ந்திருக்கிறது பசியாறிய புலி

தலையுயர்த்தி செவ்வாய் பிளந்து
இரையாடி கூர் தீட்டிய பற்களுக்கிடையே
அமர்ந்து பறந்தமர்ந்து
வேடிக்கை பார்க்கிறது காட்டு ஈ.


பொன்.வாசுதேவன்






2 comments:

  1. விலங்குகளின் பசியாரலைக் கூட அருமையாக
    சொல்லிபோகிறது வரிகள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname