Saturday, March 17, 2012

• எனக்குத் தெரியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் •





யார் நீ
எனக்குத் தெரியாது


எங்கிருந்து வருகிறாய்
எனக்குத் தெரியாது

எப்போது வந்தாய்
எனக்குத் தெரியாது

எங்கே போகிறாய்
எனக்குத் தெரியாது

எங்கிருக்கிறது உன் வசிப்பிடம்
எனக்குத் தெரியாது

உன் தாய், தகப்பன் யார்
எனக்குத் தெரியாது

உன் சகோதரன் சகோதரி யார்
எனக்குத் தெரியாது

இறந்து கிடப்பது யார்
எனக்குத் தெரியாது

இறக்கப் போவது யார்
எனக்குத் தெரியாது

உன் தாயை மானபங்கப்படுத்தியவன் யார்
எனக்குத் தெரியாது

உன் தந்தையை சுட்டவன் யார்
எனக்குத் தெரியாது

உன் சகோதரனைக் கொன்றவன் யார்
எனக்குத் தெரியாது

உன் சகோதரியை சீரழித்தவன் யார்
எனக்குத் தெரியாது

ஏன் தெரியாது
எனக்குத் தெரியாது

என்ன தெரியும் உனக்கு
எனக்குத் தெரியாது
என்று சொல்வதற்கு மட்டும்.


11 comments:

  1. என்ன கமென்ட் செய்யப்போகிறாய்?
    எனக்குத்தெரியாது!
    :-))

    ReplyDelete
  2. எனக்கும் தெரியும்
    எனக்குத் தெரியாது
    என்று சொல்வதற்கு.

    ReplyDelete
  3. மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

    கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

    மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

    இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

    ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

    இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

    சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

    இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
    for readmore www.fcrights.in

    ReplyDelete
  4. அன்பின் வாசு - எனக்குத் தெரியவில்லை ஏன் உனக்குத் தெரியவில்லை என்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. தெரிந்ததையும் ஒரு கவிதையில் சொல்லிடுங்க - தமிழரசி

    ReplyDelete
  6. பாராட்டுகள்.(தந்தையைச் ../சகோதரியைச் ... என ஒற்றெழுத்துகள் சேர்க்க வேண்டும்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete
  7. தெர்யாததுக்கெல்லாம் பதில் தேடினாலும் வாழ்க்கையோடுள்ள வழக்கு முடிவதில்லை.

    ReplyDelete
  8. வல்லின ஒற்றுகள் மிகு புணர்ச்சி மிகாப் புணர்ச்சி விதிகளை அறிந்தவர்களே தந்தையையும் சகோதரியையும் காப்பாற்ற முந்துகிறார்கள், சரியா?

    எனக்குத் தெரியாது.

    என்றால், 'சும்மா இருத்தலே சுகம்' தத்துவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?

    எனக்குத் தெரியாது.

    தெரிந்ததெல்லாம் கடந்தகாலத்தவை; தெரியாதிருத்தலே விழிப்பு நிலை, ஆமாவா?

    எனக்குத் தெரியாது.

    'எனக்கு' என்னும் தன்மைச் சேர்க்கை, அடிப்படை ஆகையால் வினாவுக்கு அடங்காது - அப்படியா?

    எனக்குத் தெரியாது.

    இது, approaching the truth by negation ஆகுமா?

    எனக்குத் தெரியாது.

    இதற்குமேல் எனக்கும் தெரியவில்லை, விடை! விடை! (bye! bye!)

    ReplyDelete
  9. கவிதை எழுதியது யார்...?

    எனக்குத் தெரியாது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname