Wednesday, October 21, 2009

உயிரோசை இதழில் ‘அகநாழிகை‘ அறிமுகம்



தமிழின் முன்னணி கலை இலக்கிய சமூகவியல் இதழான ‘உயிர்மை‘ பத்திரிகையின் இணைய இதழான ‘உயிரோசை‘ இதழில் சிற்றிதழ் அறிமுகம் பகுதியில் அகநாழிகை இதழ் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு நன்றி.

உயிரோசையில் வெளியான பதிவு



அகநாழிகை

(சமூக கலை இலக்கிய இதழ்)
விலை : ரூ.25
ஆண்டுச் சந்தா: 150
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
முகவரி :
அகநாழிகை-பொன்.வாசுதேவன்,
33,
மண்டபம் தெரு, மதுராந்தகம்-603 306.
கைப்பேசி : 99945 41010


சிற்றிலக்கிய உலகில் ஓர் புது வரவு !

தலையங்கம் மற்றும் தன் நோக்கம் இதுதான் என்ற பிரகடனம் ஏதும் இல்லாமல், இதில் வெளியாகும் படைப்புக்களே அதையெல்லாம் பறைசாற்றிவிடும் என்ற நம்பிக்கையுடன் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று தமிழ் அரங்கம் என்றும் வற்றாத சுரங்கம்என்பதை நிரூபிக்கும்வகையில் பக்கங்கள் (68 பக்கம்- 4 அளவு) நிறைய படைப்புக்களுடன் உதயமாகியிருக்கிறது அகநாழிகை‘.

பாவண்ணன், யுவன் சந்திரசேகர், எஸ்.செந்தில்குமார் என, சிற்றிதழ்களில் அதிகம் எழுதும் படைப்பாளர்களின் ஏழு சிறுகதைகள், தமிழ்நதி, லீனா மணிமேகலை, சுதீர் செந்தில் என விரியும் 30 கவிஞர்களின் ஆக்கங்கள், ஏழு கட்டுரைகள் - கனமான சிற்றிதழ்தான்!

தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்என்ற கட்டுரை 1980முதல் 1990 வரையிலான தமிழ் சினிமாவின் நிலையை விவரிக்கிறது. பதினாறுவயதினிலே முதல் தமிழ் சினிமா ஏறிய சிகரங்களையும் பின்னர் அது கண்ட பாதாளத்தையும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் அஜயன்பாலா சித்தார்த். சினிமா ரசனையாளர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை.

ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் என்ற கட்டுரையை வே.அலெக்ஸ் எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக முதன் முதலாக இந்திய (காலனிய இந்தியா) தேசிய அளவிலான இயக்கத்திற்கு வித்திட்டவர், இத்தேசத்தின் முதல் தலித் அரசுப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தவர், முதல் பாராளுமன்ற உறுப்பினராக (1925இல்) பதவி வகித்தவர் - பெருந்தலைவர் எம்.சி.ராஜா. இவரது பாராளுமன்ற உரையை கட்டுரையாக்கியிருக்கிறார். (ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நிலையைப் பற்றி சிந்திப்பதே கொடூரமானது. நாட்டின் ஒரு பகுதி மக்களை மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திடும்வகையில் சட்டங்களை வகுத்து வைத்துள்ளார்கள்...)

பல கவிதைகள் மனதில் நிற்கின்றன. . .

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழைப் பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை.

இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, படிப்போர் நெஞ்சங்களிலெல்லாம் நிலைத்துநின்று சாதனை படைக்கக் காத்திருக்கும் அகநாழிகையை வாழ்த்தி வரவேற்போம்.

- பாண்டியன்




17 comments:

  1. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வாசு

    ReplyDelete
  4. இதழ் இமயமாய் வளர‌ வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  5. ஒரே ஒரு புத்தகம் தான் வந்து சேர்ந்தது நண்பரே!

    ஸ்பெசிமன் காப்பி நம்பர் எடுத்து வைத்திருக்கிறேன்! நீங்கள் அனுப்பியது அதிக புத்தகங்கள் என்றால் கூரியரில் போய் கேட்கிறேன்!

    ReplyDelete
  6. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாசு..

    ReplyDelete
  7. பத்திரிக்கையும், நீங்களும் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் !!!!!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் வாசு!

    ReplyDelete
  10. என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள் என்னவோ எனக்குள்ளையும் ஒரு சந்தோசம் பொங்குதே இதுக்கு பேர் என்ன ?

    ReplyDelete
  11. பத்திரிகை வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பரே! மிக்க புகழுடன் பத்திரிக்கை வளர ....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வாசு!

    ReplyDelete
  14. ரொம்ப சந்தோசமாக இருக்கு

    ReplyDelete
  15. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாசு

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname