பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை
சிறுகதைப் போட்டியையும், உலக சினிமா திரையிடல் நிகழ்வையும் வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியதில் உற்சாகம் பெற்றிருக்கும் உரையாடல் அமைப்பின் அடுத்த முயற்சியாக சிறுகதை எழுதுவது குறித்த பட்டறை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை
இதுகுறித்த என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
- உள் அரங்கு எனில் ஏதேனும் பள்ளி, கல்லூரி வளாகம் அல்லது நுங்கம்பாக்கம் AICUF இல்லம் போன்ற அரங்குகளில் நடத்துவது வசதியாக இருக்கும்.
- தங்குமிடத்துடன் கூடிய அரங்கம் என்பது பட்டறையில் கலந்து கொள்வோரின் போக்குவரத்து சிரமங்களை குறைக்கும். தங்க விரும்பாதவர்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.
- உணவு வசதியை பட்டறை அமைப்பாளர்களே செய்து தரலாம்.
- பட்டறை பங்கேற்பாளர்களிடம் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து, முன்பாகவே வசூலித்து வருகையை உறுதி செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக எவ்வளவு பங்கேற்பாளர்கள் என்ற உறுதியான தகவல் பெற இயலும்.
- தமிழின் சிறந்த சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள் பட்டியல் மற்றும் சிறந்த எழுத்தாளர்கள் பட்டியல் ஆகிய தகவல்களை உள்ளடக்கிய சிறு புத்தகமாக தொகுத்து பங்கேற்பாளர்களுக்கு அளிக்கலாம். கூடவே ஒரு குறிப்பேடு மற்றும் பேனா தரலாம்.
- பயிற்சிப் பட்டறையை சிறப்புற நடத்துவதற்கு புத்தக வெளியீட்டாளர்கள் பதிப்பாளர்கள் போன்றோரை ஊக்குவிப்பாளர்களாக (Sponsors) பயன்படுத்திக் கொள்ளலாம்.
- காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக பிரித்து காலையில் இரண்டு சிறுகதை எழுத்தாளர்கள் தலா ஒரு மணி நேரம் வீதம் சிறுகதையின் கூறுகள் பற்றியும், சிறுகதையின் நுட்பங்கள் பற்றியும் பேசலாம்.
- உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வில் பங்கேற்பாளர்களை சிறுகதை எழுதச் சொல்லி வாசிக்கச் செய்து அது தொடர்பான கருத்துப் பகிர்வினை மேற்கொள்ளலாம்.
- மாலையில் திரைப்படமாகவோ, குறும்படமாகவோ எடுக்கப்பட்ட சிறுகதைகளை திரையிட்டு கலந்துரையாடலாம்.
- சிறுகதைக்கென தனித்து இல்லாமல் பொதுவாக படைப்பிலக்கியம் சார்ந்து பட்டறை அமைப்பதும் தனி முயற்சியாக இருக்கும்.
உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறை நிகழ்வு முயற்சி சிறப்புறவும், இந்நிகழ்வை முன்னெடுத்துச் செய்யும் சிவராமன் & ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், மற்றும் கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
--- "அகநாழிகை" பொன்.வாசுதேவன் ---
நல்ல யோசனைகள். புத்தக பதிப்பாளர்களை அரங்கில் கடைபோட அனுமதித்து அதன்மூலம் வருவாய் பெறலாம். அது மற்ற செலவுகளை ஈடுசெய்ய இயலும். அதோடு வரும் பதிவர்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து புத்தகங்களும் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteநல்ல யோசனைகள் தலைவரே..செயல்படுத்தும் போது இந்த யோசனைகள் நிச்சயம் பரிசீலிக்கபடும் என்று நினைக்கின்றேன்..
ReplyDeleteகேண்டீன் கண்டிராக்ட் எனக்கு கிடைக்குமா?
ReplyDeleteநன்றி வாசு. மிக நல்ல யோசனைகள்.
ReplyDeleteநெம்ப தேங்க்ஸுங்கோ தலைவரே..... !!!
ReplyDeleteஅருமையான எண்ணங்கள் யோசனைகள்.
ReplyDeleteவழிமொழிகிறேன்!
ReplyDelete// தண்டோரா இனி... மணிஜி.. said...
ReplyDeleteகேண்டீன் கண்டிராக்ட் எனக்கு கிடைக்குமா?//
போண்டா, பஜ்ஜி காண்ட்ராக்ட் எனக்கு!
:) thoughtful suggestions.
ReplyDelete-vidhya
வால் பையன் மல்லுக்கு நிக்கறது உங்க டிரேட் மார்க்கோ? ஹா...ஹா...
ReplyDeleteநல்ல யோசனைகள்...
ReplyDelete