Wednesday, July 1, 2009

"வக்கத்தவன் வாத்தியான் ; போக்கத்தவன் போலீசு"

தனக்குப் பிடித்தமான ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்கி அதைச் சார்ந்து தன்னசைவுகளை ஏற்படுத்துவது மனித விலங்கின் இயல்பான மனோபாவம்தான். பல நிகழ்வுகளின் வாயிலாக தொடர்ந்து பல முறை இது நிரூபணமாகிக கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் அப்படித்தான்.

கான்கிரீட் காடுகளில் வாழ நேர்ந்து விட்ட சமூக விலங்காகிப் போன மனிதன் தன்விருப்பம் சார்ந்து எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானம் செய்து கொள்கிறான். மனித விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்க செய்வது சமூக நடத்தைதான் என்பதில் சந்தேகமில்லை. ஊடகங்களின் தாக்கம் அதீதமாகிப் போய்விட்ட இன்றைய நாட்களில் நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது.

குழு மனப்பான்மையுடன், எதையும் வெளிப்படையாக முன் முடிவின்றி அணுக இயலாது இயல்பிழந்த மனித மனம் தனக்கு விருப்பமற்றதான monkeysஎதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதன் காரணமாக எந்த நிலையிலும் தான் சமூகத்திலிருந்து தனியனாக்கி விடப்படக்கூடாது என்ற உள்ளுணர்வு நம் மனதை இயக்க, குழும மனப்பான்மை சார்ந்தே தன் நெறிகளையும், நிகழ்த்து உளவியலையும் நம்மை கைக்கொள்ளச் செய்கிறது.

தனக்குப் பிடித்ததுதான் பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்ற கருத்து திணித்தலும், தான் ஏற்றதை பிறர் மறுக்க உரிமையுண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் திராணியற்ற எதிர்வினையாடல்களும் மனித மன ஆற்றலின் யோக்கியதையற்ற எல்லையின்மையைப் புலப்படுத்துகிறது.

உலகில் எத்தனை கருத்துண்டோ அத்தனைக்கும் சரியான எதிர் கருத்துக்களும், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை அனுமதியாத அகச்சிக்கல் ஆபத்தானது.

அறம் – ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை ஆதி குணத்தின்படியும், மரபணுக்களின் வழியாகவும், வாழ்ந்த சூழல் வாயிலாகவும், தன்னணுபவம் சார்ந்தும், கண்டு கேட்டவற்றின் அடிப்படையிலும் மனித மனம் அணுகுகிறது.

அறம் என்பது எப்போதும் ஒரே சீராக இருப்பது. மாறாக ஒழுக்கம் என்பது இடம், காலம், சந்தர்ப்பம் என்பதற்கேற்ப மாற்றமடையக் கூடியது.

எதிராளியின் பலவீனமான சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதென்பது மன இயல்பு. வாதத்திறமையின் மீதான நம்பிக்கையிலும் தன் கருத்தை நிலைநாட்டிக் கொள்வதில் சற்றும் சளைத்ததல்ல மனித மனம்.

பிரதி என்பது வாசிப்பவர்களின் முழு விமர்சனத்திற்கும், கேள்விக்கு உள்ளாக்கப்படவும், சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உரியதுதான். படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது.

ஒரு படைப்பை அணுகும் மனம் அதை முன்முடிவுகளுடனும், படைப்பாளியைப் பற்றிய தனிப்பட்ட அவதானிப்புகளுடனும், குழு மனப்பான்மையுடனும் அணுகினால் படைப்பு குறித்தான பார்வை சரியாக இருக்க முடியாது.

பிரதியை அல்லது படைப்பை பாவிக்கும் பலருக்கும் அதை அறிமுகம் செய்து கொள்கிற நோக்கில் அணுகுவதென்பது அரிதாக இருக்கிறது. பிரதி என்பதை இங்கு இலக்கியப் படைப்பாவோ, காண் ஊடக படைப்பாகவோ வேறு எவ்வாறாகவும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பிரதி அல்லது படைப்பு என்பதை நாவல், கட்டுரை, கவிதை அல்லது வலைத்தள பதிவு என்றே கொள்வோம்.

படைப்பை அணுகுகின்ற மனம் முதலில் தலைப்பைக் கண்டு அதை எழுதியவருடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது. அதன் வாயிலாக ஏற்கனவே மனதில் எழுதியவர் குறித்து பதிந்திருக்கும் கருத்துக்கள் சார்ந்து அகச்சாய்வுடன் படைப்பை அணுகுகிறது. அதன் காரணமாக அறிமுக மனோநிலையில் வாசிப்பதிலிருந்து விலகி நெறிமுகம் செய்ய முற்படுகிறது.

நெறிமுகம் என்பது பிரதியை நடுவுநிலைமையுடன் எந்த விருப்பு வெறுப்புமற்று, முன்முடிவுகளற்றும் படைப்பு வடிவத்தின் உணர் கூறுகளுக்கேற்ப விளங்கிக் கொண்டு செய்யப்பட வேண்டியது.

மாறாக முன்முடிவுகளுடனும், சமூகப் பண்பு சார்ந்தும், தன் விருப்பம் பற்றியும் படைப்பை நெறிமுகம் செய்ய முயலும் போது அதுவும் விவாதப் பொருளாகிறது.

-ooo-

post மேற்கூறிய கருத்துக்கள் நண்பர் பைத்தியக்காரன் (சிவராமன்) அவர்களின் சர்ச்சை ஏற்படுத்திய பதிவுகள் குறித்தும், அதற்கு முன் சாருநிவேதிதா மற்றும் அதன்பின் ஜ்யோவ்ராம் சுந்தர், நர்சிம் உள்ளிட்ட பதிவுலகில் தொடர்ந்த பதிவுகளை வாசித்ததன் பின்னரும் தோன்றிய எண்ணங்கள் ஆகும்.

சிவராமனின் கருத்துக்கள், சாருநிவேதிதா, நாகார்ஜுனன் குறித்தும், எனக்கு உடன்பாடான மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

சிவராமன் அவர்களை மிகச்சமீபமாகத்தான் நான் அறிவேன். தோழமையானவர். ஆழ்ந்த வாசிப்பு பழக்கமுடையவர் என்று அறிகிறேன்.

நாகார்ஜுனன் அவர்களை நிகழ், மார்க்சியம் இன்று, பரிணாமம், நிறப்பிரிகை, வித்யாசம், இனி, படிகள், புறப்பாடு சிற்றிதழ்களின் காலத்திலிருந்தே வாசித்திருக்கிறேன். புரியாதது போல இருந்தாலும் மீள்வாசிப்பில் பல புரிதல்களையும், தெளிவையும், அறிமுகங்களையும் தந்த எழுத்துக்கள் அவை. இன்றுவரையில் என்னுடைய சேமிப்பில் இருக்கின்ற சிற்றிதழ்கள் அவை.

சுந்தரராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" புத்தகத்திற்கு ஒரு விமர்சன எதிர்வினையாக ஒரு சிறு புத்தகத்தை டெல்லியிலிருந்து வெளியிட்ட போதிலிருந்து சாருநிவேதிதாவை அறிவேன். 'முன்றில்' சிற்றிதழின் சார்பில் நடத்தப்பட்ட '80களில் கலை இலக்கியம்' கருத்தரங்கின் போது நேரிலும் சந்தித்திருக்கிறேன். சிலமுறை தொலைபேசிகளில் பேசியது உண்டு. கடந்த ஆண்டு சாருவிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பிறகு பேசியதில்லை. உயிரோசை இணைய இதழில் எனது 'போடா ஒம்போது' கட்டுரை வெளியான பிறகு அவரிடமிருந்து என்னை நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதற்கு பதிலிட்டதுடன் சரி. மற்றபடி சாருவை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய அனைத்து புத்தகங்களையும் வாங்கிப் படித்திருக்கிறேன்.

சிவராமன் பதிவு சார்ந்து பதிவுகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருமே நேர்மையாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருக்கும் ஒரு விஷயத்தை ஆதரிக்கவும் மறுதலிக்கவும் காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

பதிவுலகில் எழுதுபவர்கள் அனைவருமே எதையும் எதிர்பார்க்காமல், தங்கள் நேரத்தையும், அறிவுசார் உழைப்பையும், நிதிசார் இழப்பையும் செலவு செய்துதான் எழுதுகிறார்கள். தங்கள் பதிவு பலராலும் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே பதிவுலக நண்பர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நாகார்ஜுனன், சாருநிவேதிதா இவர்களையெல்லாம் வாசித்திருக்கிறேன் என்று கூறிக்கொள்ளக காரணம் அவற்றை பதக்கங்களாக்கி தோரணமாகத் தொங்கவிட்டுக் கொள்வதற்காகவோ அல்லது நம்மை மற்றவர்கள் உயர்த்தி மதிப்பிட வேண்டும் என்றோ அல்ல.

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். அவை விவாதிக்கவும், பரிசீலிக்கப்படவும் வேண்டுமென்பதே எனது விருப்பமும். எழுதுபவர்களின் குறைந்தபட்ச அங்கீகாரமும் எதிர்பார்ப்பும் அது மட்டுமே.

-ooo-

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

நன்றி : யூத்ஃபுல் விகடன்

vdotcomlogo1

24 comments:

  1. //படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது. ஒரு படைப்பை அணுகும் மனம் அதை முன்முடிவுகளுடனும், படைப்பாளியைப் பற்றிய தனிப்பட்ட அவதானிப்புகளுடனும், குழு மனப்பான்மையுடனும் அணுகினால் படைப்பு குறித்தான பார்வை சரியாக இருக்க முடியாது.//

    நிதர்சனமான வார்த்தைகள்.

    ReplyDelete
  2. //பதிவுலகில் எழுதுபவர்கள் அனைவருமே எதையும் எதிர்பார்க்காமல், தங்கள் நேரத்தையும், அறிவுசார் உழைப்பையும், நிதிசார் இழப்பையும் செலவு செய்துதான் எழுதுகிறார்கள். தங்கள் பதிவு பலராலும் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே பதிவுலக நண்பர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.//

    உண்மைதான். ஆனால் இப்படி பலரும் விமர்சனங்கள் செய்துகொள்வதிலிருந்து அவர்களின் உண்மை முகங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதும் உண்மை...

    ReplyDelete
  3. //நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது.//

    நூறு சதவிகித உண்மை.
    சூழலும் சமூகமும் தான் நம் செய்கைக்கு காரணியாகிறது என்பது மறுக்க முடியாதது.

    ReplyDelete
  4. எழுந்த‌ ச‌ர்ச்சைக‌ள் குறித்து அந்த‌ அளவு விஷ‌ய‌ம் தெரியாத‌ போதும்,
    க‌டைசி ப‌த்தி க‌ருத்தை உண‌ர்த்தி விட்ட‌து.

    தெளிந்தேன்.

    நன்றி வாசு.

    ReplyDelete
  5. அன்பின் நண்பரே!!
    நல்ல எண்ணப் பகிர்வு!!!

    ReplyDelete
  6. மீண்டும் பதிவுகளில் பார்ப்பது சந்தோசம்!!

    ReplyDelete
  7. //உலகில் எத்தனை கருத்துண்டோ அத்தனைக்கும் சரியான எதிர் கருத்துக்களும், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை அனுமதியாத அகச்சிக்கல் ஆபத்தானது.//

    மிகவும் பண்பட்ட சிந்தையிலிருந்து தான் இப்பேர்ப்பட்ட கருத்துக்கள் வரும். வரவேற்கிறேன்.

    ReplyDelete
  8. //எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். அவை விவாதிக்கவும், பரிசீலிக்கப்படவும் வேண்டுமென்பதே எனது விருப்பமும். எழுதுபவர்களின் குறைந்தபட்ச அங்கீகாரமும் எதிர்பார்ப்பும் அது மட்டுமே.//

    இந்த ஒரு அரிசிய வச்சிகிட்டு இம்புட்டு பிரியாணி சமைச்சிடிங்களே!

    வாசிப்பும் அதன் அவதானிப்பும் வாசகனின் பார்வையில் மட்டுமே! அதற்கு ஆசிரியனோ எதிர்பார்வையுடயவனோ பொறுப்பாளி அல்ல என்பது தான் எனது கருத்தும்,
    அதே நேரம் சகட்டுமேனிக்கு பகடி செய்யும் உரிமையும் எனக்குண்டு


    ஹிஹிஹிஹி
    எதிர்கவுஜ போடனுமுல்ல!

    ReplyDelete
  9. Welcome Back எனச் சொல்லவே இந்த comment block - மற்றபடி இந்த கட்டுரை முன் வைக்கும் சர்ச்சையில் பங்கெடுக்க நான் விரும்பவில்லை - இது குறித்து வேறெங்கும் நான் பின்னூட்டம் போடவும் இல்லை ... this is just to say welcome back vasu ...

    ReplyDelete
  10. WELCOME BACK ...

    அருமை வாசு.

    நண்பர் குடந்தை அன்புமணியை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  11. //படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது.//

    உண்மைதான் வாசு... நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல இடுக்கை

    ReplyDelete
  12. முதல் படத்துக்கு தகுந்த பதிவுதான்னு நெனைக்குறேன் ....!! எங்கயோ ஆரம்பிச்சு ..... கடியாசியா கம்ப்யூட்டர்ல ஒக்காந்திருக்குற மனுஷன் வரை பூந்து வெலாடிட்டீங்க...!!! மொதல்ல படிக்கும்போது உள்குத்து எதுவும் இல்லாமத்தேன் இருந்துது.....!!!!


    கம்ப்யூட்டர்ல உக்காந்திருக்குறது பதிவரா.....!!! ஆனா வால் இல்லையே.........?????

    ReplyDelete
  13. நீண்ட நாளைக்குபின் நல்ல தமிழை படித்த திருப்தி.

    ooo-

    பின்னால் உள்ளதை படிப்பது அவசியமற்றது என நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  14. //
    கம்ப்யூட்டர்ல உக்காந்திருக்குறது பதிவரா.....!!! ஆனா வால் இல்லையே.........????? //


    avvvvvvvvvvvvvv

    ReplyDelete
  15. ஏறத்தாழ ஆறு வருஷ பதிவுகள் வாசிப்பிற்கு பின், சென்ற பிப்ரவரியில் தான் பதிவுலகில் entry.
    ஓரிரு முறை இவர்கள் அனைவரின் பதிவுகளைப் படித்தேன். சிலது சிறப்பாக இருந்தாலும், சில வார்த்தைப் பிரயோகங்கள், ரொம்ப நடைமுறையை எழுதுகிறோம் என்ற பெயரில் கொச்சையான slangs, தனி நபர் தாக்குதல் என இருந்து என் மனதிற்கு பிடிக்காததால், அப்புறம் அவர்கள் எழுத்தைப் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

    இப்போதும் அப்படித்தான். ஒரே ஒரு பதிவுகூட கொச்சையாக வந்துவிட்டால், அப்புறம் அந்த பக்கம் போவதையே நிறுத்தி விடுகிறேன். காரணம் ஒன்றும் பெரியதில்லை, அந்த அருவருப்பு உணர்வின் தாக்கம் மற்ற வாசிப்பின் சுவைகளையும் மிஞ்சி ஒரு வித அஜீரண எரிச்சல் மட்டும் அன்றெல்லாம் என்னோடு இருந்து விடும். இது நீங்கள் சொன்னது போல எந்த முன் முடிவும் கிடையாது. ஆனால், எங்கே மீண்டும் எரிச்சல் மட்டும் ஊட்டக்கூடிய படைப்புக்களை படிக்க நேரமோ என்ற ஒரு அச்சம் தான்.

    என்ன இருந்தாலும், பைத்தியக்காரன் அவர்கள், இதில் எதிலும் சம்பந்தப்படாத சாருவின் மகளை இந்த அரசியலில் அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்த அவருக்கு தன் மனச்சாட்சி கூட உறுத்தவில்லை பாருங்கள்? யாரையோ அவமானப் படுத்துவதாக நினைத்து, இவர் விட்ட சொல்லம்பு வேறு யாரையோ நிச்சயம் காயப்படுத்தி இருக்கும்.

    இதை மட்டும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    மற்றபடி, தமிழ் பதிவுலகின் அரசியல் விளையாட்டுக்கு நான் வரவில்லை.

    ReplyDelete
  16. வாசு,

    welcome back! ஜோதி சொன்னதுபோல் தமிழ் அவ்வளவு அழகா இருக்கு உங்கள் தளத்தில்.

    'நெறிமுகம்' பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

    அனுஜன்யா

    ReplyDelete
  17. ஒக்காந்து யோசிப்பாங்களோ ! எப்படித்தான் முடியுதோ!!!!

    ReplyDelete
  18. உள்ளத்தில் இருந்து தெறித்து வந்துள்ள வார்த்தைகள்.. வெல்கம் பேக் வாசு..:-)))))

    ReplyDelete
  19. இடைவேளைக்குப் பின் நல்ல பதிவு..

    ReplyDelete
  20. உங்கள் எழுத்தில் உள்ள நேர்மை மிகப் பிடித்திருக்கிறது நண்பரே!

    ReplyDelete
  21. தெளிந்த மனநிலையின் வார்த்தைகள்

    ReplyDelete
  22. Welcome back boss!
    உங்கள் வரவை களி கூறவே பின்னூட்டம்

    ReplyDelete
  23. நல்ல கருத்து.ஆனால் சின்ன வருத்தம். "விருப்பப்பட்டு, கஷ்டப்பட்டு 'தேசிய உணர்வோடு'இந்த பணிக்கு வந்தேன்.(ஒரே வரியில் போக்கத்தவனுக்கு என்று சொல்லிவிட்டீர்களே? நீங்கள் என்ன செய்வீர்கள்..பழமொழி அப்படியுள்ளது..)"

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname