முடிவடையாத காலத்தின் துணுக்குகளில்
நுண்ணணுவாய்ப் பிணைந்திருக்கும்
சதை இரத்தம் காற்றுக் கலவை நம் உயிர்
கிடந்தழுத்தும் பிரியச் சேறில்
இணைந்து பிணைந்து
ஐயக் கேவலுற்று சண்டையிட்டழுது
கண்ணீரிட்டுக் கதறி மீண்டு
மீண்டும்
இணைந்திணைந்து தொடர்ந்து
பெருவரியோடிய நதிக் கோடுகளாய்
முற்றுப்பெறாதொரு வாழ்வெளியில்
ஜென்மங்கடத்தி
பார்க்காத கணத்தில் உருகி
பார்த்த கணத்தில் கண்ணீர்ப் பெருக்குற்று
தழுவிக் கடத்தி விலகிச் சென்று
தனித்திருக்கும் தொலைவுகளுக்கப்பால்
அடர் நினைவுகளுடன் பிடிப்பும் பற்றுமாய்
சேர்ந்து உயிர்த்திருக்கும் நம்மை
உற்று நோக்கியபடியிருக்கிறது காலம்
மௌனமாய்.
•
பொன்.வாசுதேவன்
ரொம்ப அழகான கவிதை.. மனசுக்குள் ஏதெதோ பேசிக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை என்னுடன்..
ReplyDeleteகிடந்தழுத்தும் பிரியச் சேறில்
ReplyDeleteஇணைந்து பிணைந்து///அருமை
Thalaiva..... Just love it...
ReplyDelete