Sunday, November 18, 2012

தர்மபுரி கலவரத்திற்கு பின்ணணி குழந்தைத் திருமணமா?


“சட்ட விரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?” தலைப்பில் தர்மபுரி சாதிக் கலவரத்தைப் பற்றி தோழர் அருள் என்பவர் எழுதி இருந்தார்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் இவற்றை எல்லாம் ஆதாரமாக முன்வைத்து ‘இளவரசன்‘ என்ற அந்த தலித் இளைஞருக்கு 19 வயதுதான் ஆகிறது என்றும், அதனால் சட்டப்படி திருமணத்திற்கு உகந்த வயது அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார். அதுவுமல்லாமல், சட்ட விரோத குழந்தைத் திருமணத்திற்கு எல்லோரும் வக்காலத்து வாங்குவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

The Prohibition of Child Marriage Act, 2006,
Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age.

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிற அளவுக்கு பக்குவமற்ற வயது என்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அறிவியல் ரீதியாக உடல் நலம் சார்ந்து தகுதியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும், இப்படியான திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

உண்மையில் தர்மபுரி சாதிக் கலவரத்திற்கு காரணமான திருமணத்தில் குழந்தைத் திருமண தடைச்சட்டம் பிரயோகிக்க பொருந்தக் கூடியதல்ல. நடந்து முடிந்து விட்ட ஒரு திருமணத்தைப் பொறுத்த வரையில் திருமணத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் இந்துக்கள் என்பதால், இந்து திருமணச் சட்டம் 1955 மட்டுமே பொருந்தத்தக்கது. மேற்படி திருமணம் செல்லத் தக்கதா, தவிர்த்தகு திருமணமா, செல்லா நிலையதா என்பதை இந்து திருமணச் சட்டத்தின் வாயிலாகவே நிலை நிறுத்த முடியும்.

இந்து திருமணத்திற்கான ஐந்து கட்டாய அம்சங்களை இந்து திருமணச் சட்டம் வரையறுத்துள்ளது. அதற்குட்பட்டே இந்து திருமணங்கள் நடைபெற வேண்டும். அதில் முக்கியமான ஒன்று வயதைப் பற்றியது.

The Hindu Marriage Act, 1955 Section 5 (iii) the bridegroom has completed the age of eighteen years and the bride, the age of fifteen years at the time of marriage.

அதாவது ஆணுக்கு 18 வயதும், பெண்ணுக்கு 15 வயதும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டம் 1.10.78 ல், ஆணுக்கு 21 வயது என்றும், பெண்ணுக்கு 18 வயது என்றும் திருத்தம் செய்யப்பட்டது.

ஆக இந்து திருமண சட்டத்தின்படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம்தான். அதே சமயம்
மேற்குறிப்பிட்ட வயதுக்குள்ளாக இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டால் அது செல்லத்தகாத திருமணமா என்றால் இல்லை என்கிறது அதே இந்து திருமண சட்டம், 1955, பிரிவு 13 (2) (iv).

இந்து திருமண சட்டம், 1955, பிரிவு 13 என்பது விவாகரத்துக்கானது.
The Hindu Marriage Act, 1955
Section 13 (2) (iv) that her marriage (whether consummated or not) was solemnized before she attained the age of fifteen years and she has repudiated the marriage after attaining that age but before attaining the age of eighteen years.

உரிய வயதுக்கு முன்பாக ஒரு திருமணம் நடைபெற்று விட்டால் அந்த திருமணம் செல்லத் தகாதது அல்ல என்றாகி விடாது. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5 (iii) ல் வயது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பிரிவு 13(2) (iv) என்பதில் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை.

இந்த வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தகுதியானவர்கள் என்பது வரையறுக்கப்பட்டது. அப்படி செய்து கொண்டால் அது செல்லத் தக்கதா, செல்லத் தகாததா என்றால்.. செல்லத்தக்க திருமணம்தான் என்கிறது சட்டம். அப்படி மணம் செய்து கொண்டவர்கள் உரிய வயதை அடையும் போது, அந்த திருமணத்தை தொடரலாமா, ரத்து செய்யலாமா என்ற முடிவை எடுக்கிற உரிமை உண்டு.

மாண்பமை நீதிபதி நாகமுத்து தலைமையிலான முழு அமர்வு T.Sivakumar vs The Inspector of Police, Thiruvallur Town Police Station and others என்ற வழக்கிலும், V.Premakumari vs M.Palani என்ற வழக்கில் மாண்பமை நீதிபதி அக்பர் அலி அவர்களாலும் என இரண்டு முக்கிய வழக்குகளில் இதற்கான தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் வழங்கியிருக்கிறது.

மேற்படி இரண்டு வழக்குகளுமே, Prohibition of Child Marriage Act, 2006 பிரிவு 2 (e) & 3 ஆகியவற்றின் கீழ் உரிய வயதடையாததால் திருமணத்தை ரத்து செய்யக் கோரியும், தண்டனைக்குரிய குற்றம் எனவும் தொடரப்பட்ட வழக்குகள் என்பது முக்கியமானது.

தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் சாதி வெறியும், அதையொட்டிய முன் விரோதமும்தான். இதை எத்தனை விதமாக பூசி மெழுகினாலும், உண்மை இதுதான்.



20 comments:

  1. தூக்கணாங்குருவி அவர்களே! குரங்குக்கு புத்திமதி சொல்லிய பழங்கதை மறந்துவிட்டதோ?

    ReplyDelete
  2. அருள், புத்திசாலியாக இருந்தால் இதுபோல் முட்டாள்த்தனமாக ஜஸ்டிஃபை பண்ணியிருக்க மாட்டார்.

    என்னங்க அந்தக் காலத்திலேயே

    பிரேமையின் ஜோதியினால்...
    பேரின்பம் எங்கும் பொங்கும்
    இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
    பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
    அன்பு மழை பொழியும்.

    பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
    சீருலாவிடுமோ.. ஓ...
    ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
    துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
    இன்ப மழை பொழியும்.. ஓ..

    மனத்தாலே நினைத்தாலும்
    இனிப்பாகும் எண்ணம்
    மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
    ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
    அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
    ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
    நீதி மழை பொழியும் .. ஓ


    அழகாப் பாடி வச்சிருக்காங்க.

    50 ஆண்டுகளுக்கு அப்புறமும் இவர்கள் இப்படியே இருந்தால் என்ன செய்ய???

    ReplyDelete
  3. // //அப்படி மணம் செய்து கொண்டவர்கள் உரிய வயதை அடையும் போது, அந்த திருமணத்தை தொடரலாமா, ரத்து செய்யலாமா என்ற முடிவை எடுக்கிற உரிமை உண்டு.// //

    உரிய வயதை அடைவதற்கு முன்பு அவர்களது திருமணம் செல்லத்தக்கது அல்ல என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. // //இந்து திருமணச் சட்டம் 1955 மட்டுமே பொருந்தத்தக்கது. மேற்படி திருமணம் செல்லத் தக்கதா, தவிர்த்தகு திருமணமா, செல்லா நிலையதா என்பதை இந்து திருமணச் சட்டத்தின் வாயிலாகவே நிலை நிறுத்த முடியும்.// //

    நீங்கள் சொல்வது தவறான தகவல்.

    குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 இந்து திருமணச்சட்டத்தை கட்டுப்படுத்தக்கூடியது என்று தில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    "Prohibition of Child Marriage Act (PCMA) being a special Act, it will override provisions of the Hindu Marriage Act (HMA) or for that matter any personal law in case there is any conflict," a three-judge bench headed by acting chief justice AK Sikri said in a 62-page judgment on child marriage.

    http://in.news.yahoo.com/child-marriage-act-override-personal-laws-says-delhi-183000407.html

    ReplyDelete
  5. குழப்புறீங்களே ஐயா, யாரவது சட்டம் தெரிஞ்சவங்க இதை தெளிவாக்குங்கப்பா............

    ReplyDelete
  6. வாங்க, நம் இடுகைக்கு...பள்ளிக்கூடம் போகாதவருக்கே புரியும்...!

    ReplyDelete
  7. 19 வயதும் எட்டுமாதம் கொண்ட ஆண் சாதி வெறி காரணமாக குழந்தை ஆகிவிட்டான்.
    கலப்பு திருமணம் முடித்த தம்பதிகள் வாழ்க.

    ReplyDelete
  8. அருள்: உங்க வன்னியர் சமூகத்தில் இதுமாரி திருமணங்கள் (குழந்தைத் திருமணங்கள்) எத்தனை கடந்த 1 வருடத்தில் நடந்து இருக்கு??


    ஒண்ணுமே நடக்கலையா??

    ஆயிரமா இல்லை லட்சமா???

    அப்போ எல்லாம் என்னத்தை கிழிச்சீங்க, நீங்க??? ஏங்க சும்மா போட்டுக்கிட்டு..

    இந்த நிகழ்வால் உங்க சமூகத்துக்கு நீங்களே சூனியம் வச்சுக்கிட்டிங்க! வன்னியன்னா சாதி வெறிபிடிச்ச காட்டுமிராண்டிகள்னு காட்டி இருக்கீங்க. அவளோதான்..

    ஒழுங்கா ஒரு கண்டனப்பதிவு போட்டு கொஞ்சமாவது நாகரிக நடந்துக்கிறத விட்டுப்புட்டு நீங்களும் ஏன் இப்படி??

    ReplyDelete
  9. என்ன செய்ய எப்பாடு பட்டாவது சாதியை நிலைநிறுத்த வேண்டும். அதிலும் வன்னியர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல, திருச்சியில் கிறித்தவ வன்னியர்கள் தனிக் கல்லறை எல்லாம் வைக்கின்றார்கள், பிசப் ஆவது எல்லாம் வன்னியர்களே, கல்லூரிகள் போன்றவற்றில் உயர்பதவிகள் எல்லாம் வன்னியர்களே. இந்து வன்னியர்கள் செய்யும் அட்டூழியங்கள் ஏராளம் ஏராளம். சென்னையில் பல வன்னியர்கள் கலப்பு மணம் செய்யத் தொடங்கிவிட்டார்கள் ஆகவே கிராமத்தில் இருப்போரை மிரட்டி உருட்டி மூளைச் சலவை செய்து வைத்தால் தான் திமுக, பாமக என பல கட்சிகளும் வாக்கரசியல் என்ற பெயரில் வாய்க்கு அரிசி போட முடியும். சாதி வெறி பிடித்த அருள் போன்றோரின் பதிவுகளை தமிழ் மணம் திரட்டுவதே இழுக்கு ... சொன்னா கேட்பார்களா ? என்னவோ .. இதை எல்லாம் சொன்னால் ரக்மான் என்பவர் என்னையும் வன்னியராக்கிவிட்டார் .. போங்க பேசாமல் ஆப்பிரிக்காவில் மாரியாத்தா கோவில் கட்டி கூழ் ஊற்றலாம் என இருக்கின்றேன். எல்லாம் வந்து சேருங்க ..

    ReplyDelete
  10. இக்பால் செல்வன் said...

    // //பேசாமல் ஆப்பிரிக்காவில் மாரியாத்தா கோவில் கட்டி கூழ் ஊற்றலாம் என இருக்கின்றேன்.// //

    தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் மாரியாத்தா கோவில் இருக்கிறது. நானே நேரில் சென்றிருக்கிறேன். எனவே, இக்பால் செல்வன் புதிதாக கோவில்கட்ட வேண்டாம்.

    ReplyDelete
  11. அருள் நீர் ஒரு தரம் கெட்ட கீழ்தரமான சாதி வெறியர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். உமது சல்லாப்புகளை குப்பை கூடையில் போடவும்.

    ReplyDelete
  12. "இந்த நிகழ்வால் உங்க சமூகத்துக்கு நீங்களே சூனியம் வச்சுக்கிட்டிங்க! வன்னியன்னா சாதி வெறிபிடிச்ச காட்டுமிராண்டிகள்னு காட்டி இருக்கீங்க. அவளோதான்.."

    வருண் கூறுவது மிகவும் சரி. வன்னியர் என்றால் சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகள் தான். அதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
    கடைந்தெடுத்த சாதீய ரவுடியான ராமதாஸ், காடுவெட்டி குரு (தலை வெட்டி என்பது பொருத்தமானது) போன்ற கேடு கேட்டவர்கள் இருக்கும் வரை இவ்வாரான சம்பவங்கள் தொடரும் .........

    ReplyDelete
  13. "தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் சாதி வெறியும், அதையொட்டிய முன் விரோதமும்தான். இதை எத்தனை விதமாக பூசி மெழுகினாலும், உண்மை இதுதான்."

    இதை பூசி மெழுக போய் அருள் என்பவர் மூக்குடைபட்டு அம்மணமாக நிற்கின்றார்.

    ReplyDelete
  14. "19 வயதும் எட்டுமாதம் கொண்ட ஆண் சாதி வெறி காரணமாக குழந்தை ஆகிவிட்டான்.
    கலப்பு திருமணம் முடித்த தம்பதிகள் வாழ்க."

    எல்லாம் சாதிவெறியர்களின் சல்லாப்புகள்.

    கலப்பு திருமணம் முடித்த தம்பதிகள் வாழ்க

    ReplyDelete
  15. தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

    http://arulgreen.blogspot.com/2012/11/Dharmapuri-violence-myths-facts.html

    ReplyDelete
  16. இளவரசன் தனக்கு வயது 23 என்று காவல் துறையிடம் எழுத்து மூலமாக மனுக் கொடுத்துதான் சேலம் டி.ஐ.ஜி அலுவலக்த்தில் புகார் மனுக் கொடுத்து தஞ்சம் அடைந்து காவல் துறையை ஏமாற்றியுள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவனின் பிறந்த தேதியை கூட விசாரணையீல் கண்டுபிடிக்க கையாலாகவில்லை காவல் துறையால்

    ReplyDelete
  17. திருட்டு கல்யாணத்தை ஆதரித்த காவல் துறை வாழ்க !!!

    ReplyDelete
  18. தருமபுரி நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காவண்ணம் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து பேசி தீர்வுகாண முன்வர வேண்டும். @@@@
    என்பதை தெளிவாக சொன்ன அருள் சாதி வெறியனா???
    அருள் பதிவை சரியாக கூட படிக்காத நீங்கள் சாதி வெறியனா????

    ReplyDelete
  19. திருட்டு கல்யாணம் பதிவு செய்வது எப்படி
    ரொம்ப சுலபமான வழி
    அருகில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் போங்க
    வாசலில் புரோக்கர் இருப்பாங்க
    சொலலுங்க
    அவர்களே எல்லா ஆவணமும் தயார் செய்துக்கு வாங்க
    எடுத்துக்காட்டு
    இந்த சான்றிதழில் உள்ள மணமகனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று மனைவி 5 மாதம் கர்ப்பம்
    மணமகளுக்கு ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர் தலைமையில் திருமணம் நடைபெற்று 2 5 நாட்கள் ஆகியுள்ளது
    ஏற்கனவே திருமணம் ஆன இவர்களுக்கு
    திருட்டு சட்டவிரோத கல்யாணம் சட்டப் பூர்வமாக பதிவாகியுள்ளது பத்திர பதிவு அலுவலகத்தில்
    இந்த மணமக்கள் தருமபுரி மாவட்டத்தில் வசிப்பவர்கள்
    திருமணம் பதிவானது நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில்
    கோவில் இரசிதில் கையொப்பம் செய்துள்ளவர் முன்னாள் எம் எல் சி
    மொத்தம் கல்யாண பதிவு செலவு ரூ 8,000/- மட்டுமே
    வாழ்க திருட்டு மணமக்கள் !!!!
    வளர்க தமிழக பதிவு துறை !!!!


    http://www.facebook.com/photo.php?fbid=523336317679120&set=a.522503711095714.130372.522502171095868&type=1&theater

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname