பிரியத்தைச் சொல்லிய நீ
கட்டிக் கொண்ட நீ
தோளில் சாய்ந்த நீ
சட்டைப் பொத்தான்களைத் திருகியபடி
சாய்ந்து மார்பில் கடிக்கின்ற நீ
மார்புகளை உறிஞ்சுகையில் முனகுகின்ற நீ
முயங்கும் பொழுது தலைமுடியைப்
பற்றிக் கொள்கிற நீ
கண் மூடி ஆராதித்து ரசிக்கின்ற நீ
மடியில் படுக்க வைத்துக் கொள்கிற நீ
தயிர் சாதம் ஊட்டி விடுகின்ற நீ
கோபித்துக் கொள்கிற நீ
சண்டையிடுகிற நீ
தொடையில் திருகும் நீ
வாதம் செய்கிற நீ
அழுகிற நீ
மன்னிப்பு கேட்கிற நீ
சமாதானமடைகின்ற நீ
வலி உணர்கின்ற நீ
குழந்தையாகின்ற நீ
புத்திசாலியாய் இருக்கின்ற நீ
எழுதுகின்ற நீ
விமர்சனம் செய்கிற நீ
குழந்தையை ரசிக்கிற நீ
பாடம் சொல்லிக் கொடுக்கிற நீ
சமையல் செய்கிற நீ
துணி துவைக்கின்ற நீ
தூங்குகின்ற நீ
எனக்குத் தெரிந்த நீ
எனக்குத் தெரியாத நீ
*
பொன்.வாசுதேவன்
//எனக்குத் தெரிந்த நீ
ReplyDeleteஎனக்குத் தெரியாத நீ// நன்றாக இருக்கிறது !
எனக்கான நீ?
ReplyDeleteஉன் நீயை, நீட்சி அடையாமல் நிர்வகிக்கும் நீயாகவே இருக்கின்றாய். நல்ல அன்பை உட்கொண்ட கவிதை,
ReplyDeleteneeyaahave nee
ReplyDeleteஎல்லாவற்றையும் ரசிக்க தெரிந்த நீ!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!