Monday, February 7, 2011

படைப்பு அடிமைகளும், அகச்சுதந்திரமும்




கலையின் இலட்சியம், வாழ்வின் இலட்சியம் ஒவ்வொரு மனிதனிலும், உலகிலும் உள்ள சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் அளவை அதிகமாக்குதல் மட்டும்தான்.

- ஆல்பஃர் காம்யூ

வழக்கம்போலவே கடந்த ஆண்டுகளில் கண்ட நிறைகளையும், குறைகளையும் மனதில் ஏற்படுத்தியபடி புது வருடம் வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதாரச் சுரண்டல் பற்றியெல்லாம் கவலைப்படுவதால் ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்பது சாசுவதமான உண்மை. அதே சமயம் இலக்கிய உலகில் படைப்புச் சூழல் உத்வேகத்துடன் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

அகிலம் சார்ந்த எழுத்துக்களின் புதிய அறிமுகங்களும், புதிய தத்துவ நீட்சிகளும் இல்லாத வறட்சியான நிலை தெரியாத வண்ணம் பொதித்து வைத்திருப்பதும், அதையொட்டிய கருத்தியல்கள் எழுப்பப் படாமல் இருப்பதும் ஒரு குறைதான். அதிகாரங்களை எதிர்த்து கேள்வியெழுப்பு வதிலும், அதிகாரத்திற்கு ஆதரவாக குடை பிடிப்பதிலுமான நோக்க நுண்ணரசியல் ஒன்றேதான் என்று படுகிறது. இலக்கிய வாதிகள் சமூக அறம் சார்ந்து கேள்விக்குள்ளாக்குவது, ஒழுக்க நெறிகளைப் பேசுவது இவ்விரண்டுக்குமான மூலநோக்கம் எது வென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு சினிமா, பொது மக்கள், அரசியல், ஆன்மீகம் என பல்வேறு மட்டங்களில் சமாதான நிரப்பிகள் தேவைப் படுவது போல இலக்கியத்திலும் தேவைப் படுகிறது. இதன்பொருட்டே, அதிகார எதிர்ப்புக்குரல்களும், ஆதரவுக் குரல்களும் இலக்கிய வெளியிலிருந்து எழுந்து கொண்டே யிருக்கிறது. இதற்கு பலிகடாக்கள் ஆவது படைப்புலக அடிமைகள்தான்.

பெண்ணியம், தலித்தியம் என்பதிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. பெண்ணியம், தலித்தியம் இரண்டையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான சிரமப் பெரும் முயற்சிகளுக்கு இணையாக, அதை நசுக்குவதற்கான உளிகளும் நேரிடை யாக, மறைமுகமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றது. தர்க்க ரீதியாகவோ, மாற்றுக் கருத்தியல்கள் வழியாகவோ இது சாத்திய மாகும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவுத்தளத்தில் இயங்கு பவர்களின் மனமாற்றம் ஒன்றே இவ் விஷயத்தில் புத்தாக்கம் ஏற்படுத்தும். ஆனால் இலக்கியச் சூழலில் சங்கிலியால் பிணைக்கப் பட்ட அரசியல் அடிமைகள் இருக்கும்வரை இது சாத்தியமில்லை.

இன ஓடுக்குமுறை பகிரங்கமாக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு, கொடூர வாழ்க்கைச் சூழல் என்பது சாதாரணமான ஒன்றுதான் என்பதான கருத்தாக்கம் ஏற்பட்டு விட்டது. இன ஒடுக்குமுறை அதிர்ச்சிகளை ஒரு உணர்வுகள் மரத்துப்போய் ஒரு செய்தியாக மட்டுமே அணுகும் பழக்கம் சமீபாக ஏற்பட்டுள்ளது. எதையொட்டியும் கேள்வியோ மறுப்போ எழுப்பாது அடி பணிந்து செல்கிற இந்த மனோநிலை வருங்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் ஒரு சவாலாகவே இருக்கும்.

தற்போதைய சூழலில் தன்னைத்தானே பேணிக்கொள்வதிலும், தனக்கு உகந்ததை மட்டுமே ஈணுவதிலும் மட்டுமே அக்கறை கொண்ட சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது சிக்கலான ஒன்று. அகவன்முறைகள் எழுத்திலும், பேச்சிலும் தொடர்ந்து நீடித்து வருவதும் மனக்கட்டமைப்புகள் மீதான ஒரு அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகே உள்ளது.

மன அழுத்தங்களற்ற சுதந்திர வெளியில் செயல்பாடுகள் அமையும் சூழல் ஏற்படும் போது மட்டுமே உன்னதமும், அற்புதமும் நிகழக்கூடும். கட்டுப்பாடுகளற்று எதையும் அறிவுசார்ந்த சிந்தனையுடன் தீர்மானிக்கும் சுதந்திரம் ஒன்று மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகும்.

*

- பொன்.வாசுதேவன்

13 comments:

  1. நல்ல பகிர்வு. தமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Please put the quote of Albert Camus in English also. I am not able to understand the Tamil version. It is confusing.

    ஆங்கிலத்தில் எழுதினால் நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு.

    நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறோம். நம்மை அல்ல.

    நல்ல கட்டுரை.

    தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  6. ஆஹா!

    இந்த வாரம் வாசுவா? கலக்கல்! :-)

    வாழ்த்துகள் வாசு!

    ReplyDelete
  7. //தற்போதைய சூழலில் தன்னைத்தானே பேணிக்கொள்வதிலும், தனக்கு உகந்ததை மட்டுமே ஈணுவதிலும் மட்டுமே அக்கறை கொண்ட சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது சிக்கலான ஒன்று.//

    //மன அழுத்தங்களற்ற சுதந்திர வெளியில் செயல்பாடுகள் அமையும் சூழல் ஏற்படும் போது மட்டுமே உன்னதமும், அற்புதமும் நிகழக்கூடும்.//

    உண்மை...ஆமோதிக்கிறேன்! இதே கருத்துக்கள் மீதான என் பார்வைகளை எனது புதிய வலைத்தளத்தில்[http://thirandhamanam.blogspot.com/] ஒரு கட்டுரையாகவும், கவிதை வடிவிலும் பதிவு செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வந்து பாருங்களேன்!

    ReplyDelete
  8. நல்ல பதிவு. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அடடா என்னடா இன்னிக்கு ரெண்டு பதிவு வருதேன்னு பார்த்தேன். அப்படியா சங்கதி!! நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நட்சத்திர வாழ்த்துகள் வாசு அண்ணா.

    ReplyDelete
  12. நட்சத்திர வாழ்த்துகள் வாசு :)

    ReplyDelete
  13. நட்சத்திர வாழ்த்துகள் வாசு ;-)

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname