Thursday, January 13, 2011

அகநாழிகை புதிய இதழ்

நண்பர்களுக்கு, வணக்கம்.

2011 துவங்கி புத்தக வெளியீட்டு நிகழ்வுகள், புத்தகச் சந்தை, விமர்சனக் கூட்டங்கள், நண்பர்கள் பலரது புத்தகங்களும் வெளிவந்துள்ளதும்என புத்துணர்ச்சியோடு இலக்கியச் செயல்பாடுகள் முன்னகர்வது மகிழ்வூட்டுவதாக உள்ளது.

உயிர்மை பதிப்பக வெளியீடாக எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ வெளிவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. நண்பர்கள் வாசித்து தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

*

அகநாழிகை பதிப்பகம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் இதுவரை 12 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. புத்தகச் சந்தையில் அரங்கு எண்.274-ல் (நிவேதிதா புத்தகப் பூங்கா) அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு நாட்களில் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளதான செய்தியும் அறிந்தேன்.

இந்த ஆண்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் :

1. பரத்தை கூற்று (கவிதைகள்) - சி.சரவண கார்த்திகேயன்
2. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைகள்) - செல்வராஜ் ஜெகதீசன்
3. மயிரு (கவிதைகள்) - யாத்ரா

இந்த ஆண்டின் வெளியீடான இம்மூன்று புத்தகங்களும் அதனதன் அளவில் தனித்துவமானவையாக புத்தகச் சந்தையிலும் முக்கிய கவனம் பெற்றுள்ளவை.

*

அகநாழிகை (இதழ் எண்.6) தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம்போலவே முக்கியப் படைப்பாளிகளின் ஆகச்சிறந்த படைப்புகளும், நம்பிக்கையூட்டும் எழுத்துகளையும் அகநாழிகையில் வாசிக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் உண்டு.

‘அகநாழிகை‘ இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. எந்த பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பரமோ, ஆதரவோ இன்றி இந்த ஓராண்டை கடந்துள்ளது. பெரும் சிரமத்துடனான இம்முயற்சியை வலி என்று கூட சொல்லலாம். ஆனால் ஏதோவொன்றை நோக்கி நம்பிக்கையிழக்காமல் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஆறுதலாயிருக்கிறது. இது நண்பர்களின் உதவியோடும், சந்தாதாரர்களாகிய வாசகர்களின் அன்போடும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு சந்தா அளித்த நண்பர்களின் சந்தா தொகை முடிந்துவிட்டதால் சந்தாவை புதுப்பித்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையிலும் சந்தா புதுப்பிக்க நினைவூட்டு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.

அகநாழிகை இதழின் ஆண்டு சந்தா தொகை ரூ.150 மட்டுமே.

சந்தா தொகை செலுத்தும் விவரங்கள் இப்பக்கத்திலேயே உள்ளது அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

*

மிக்க அன்புடன்
பொன்.வாசுதேவன்
ஆசிரியர் - அகநாழிகை
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
பேச : 999 454 1010

*


அகநாழிகை இதழ் எண்.6-ல் இடம்பெற்றுள்ள படைப்புகள்


கட்டுரை


1. ஆணின் பெண் : உடை அரசியல் - கொற்றவை

2. திருடனின் வீடு - எஸ்.செந்தில்குமார்

3. மிலோராட் பாவிச் : மாயவெளி - வெ.சித்தார்த்

4. கரிசனமும் யதார்த்த இம்சையும் - அய்யனார் விஸ்வநாத்

சிறுகதை

1. மாசு மருவற்ற வெகுளி - வாமுகோமு

2. வாக்குமூலம் - ஒரிய மூலம் : பரமிதா சத்பதி தமிழில் : சித்தன்

3. பூமராங் - ரிஷான் ஷெரிப்

4. வெயிற்பந்தல் - ராகவன் சாம்யேல்

5. ஈஸ்வர வடிவு - இந்திரா பாலசுப்பிரமணியன்

மதிப்புரை

1. வாழ்வே புனைவாய் - உமாஷக்தி

2. கிறுக்கனுக்க மகன் கவிதைகள் - ந.பெரியசாமி

கவிதைகள்

விக்ர மாதித்யன்
ராஜசுந்தரராஜன்
வசுமித்ர
நரன்
யாத்ரா
செல்வராஜ் ஜெகதீசன்
கதிர்பாரதி
சுகிர்தா
நர்சிம்
இவள்பாரதி
விதூஷ்
லதாமகன்
வேல்கண்ணன்
ஆதவா

*

அகநாழிகை வெளியீடுகள் கிடைக்குமிடங்கள்

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை.

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

சாந்தி புக்ஸ், (சாந்தி திரையரங்க வளாகம்), அண்ணா சாலை, சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை.

சுதர்சன் புக்ஸ், 74, எஸ்.பி.ஆபிஸ் ரோடு, நாகர்கோவில்.

*

16 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அன்பின் வாசுதேவன் - புத்தாண்டில் சிரமங்கள் அறவே அகன்று, எல்லாம் நினைத்த படி நடக்க நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வாழ்த்துகள் அண்ணா.

  ReplyDelete
 4. நன்றியும் எனது அன்பும்.
  //எந்த பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பரமோ, ஆதரவோ இன்றி இந்த ஓராண்டை கடந்துள்ளது. பெரும் சிரமத்துடனான இம்முயற்சியை வலி என்று கூட சொல்லலாம்//
  எனக்கும் வாசு ... உணர்கிறேன்...வலியை

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் வாசு. வலியைப் பகிர்ந்துகொள்ள எங்கள் போன்ற வாசகர்கள் இருக்கிறார்கள் ஆறுதலாய்.

  ReplyDelete
 6. அகநாழிகையின் ஓராண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வலி மறைந்து வலிமையாய் அமையட்டும் வரும் ஆண்டு.

  ReplyDelete
 7. unkalathu thodar pani niccayam palanalikkum, carry on -vidyashankar

  ReplyDelete
 8. வாழ்த்துகள் வாசு!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் தல :-))

  ReplyDelete
 10. மனம் நிறைந்த வாழ்த்துகள் வாசுஅண்ணா !

  ReplyDelete
 11. வாழ்த்துகள் வாசு :)

  ReplyDelete
 12. வாழ்த்துகள் வாசு. விரைவில் வாசித்து விடுகிறேன்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அகநாழிகையின் ஓராண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வலி மறைந்து சுகமான நினைவாய் அமையட்டும் வரும் ஆண்டுகள் எல்லாம். வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. அகநாழிகைக்கு எனது வாழ்த்துக்கள். எனது பதிவு தளம் sankarganeshs.blogspot.com. மிக அருமையாய் வடிவமைத்துள்ளீர்கள் உங்கள் வலை தளத்தினை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname