Tuesday, June 8, 2010

தொன்மை மிக்க தெய்யம் நடனம்


(உயிரோசை இணைய இதழில் வெளியான கட்டுரை)

"கடவுளின் சொந்த பூமி"கேரளாவை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்கேரளத்தின் இயற்கையும்,எழிலும் அதையே உறுதிப்படுத்துகிறதுதொன்மக் கலைகளிலும் நடனங்களிலும் கூட மிகச் சிறப்பான பெயர் கேரளாவிற்கு உண்டுதெய்யம்கோலம் துள்ளல்பேட்டை துள்ளல்சவிட்டு நாடகம் என கிராமம் சார்ந்த பலவகை நடனக் கலைகளின் வேர்கள் இங்குதான் தொடங்கியிருக்கிறதுநடனங்களை மதத் தொடர்பான கலாச்சாரப் பின்னணியில் இழைத்து வெளிப்படுத்துகின்ற கேரள பாணி நடனப்பாங்கு நம்மை மட்டுமல்லாமல்வெளிநாட்டினரையும் வியக்க வைத்திருக்கிறது.பாரம்பரிய கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம்வடக்கு மலபார் பகுதி முழுவதிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் பழங்கால நடனமுறை.குறிப்பாகஇந்துமதப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப் பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம்நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.போராளிகளும்ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு.

குடிவழி சார்ந்த போர் வீரர்களையும்அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம்வரலாற்றிலும் இது பற்றிய குறிப்புகள் நமக்குக் காணக் கிடைக்கின்றனதமிழிலும் சங்க இலக்கியத்தில்வேலன் வெறியாட்டல்‘ என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு இருக்கிறதுஇறந்த வீரர்களின் நினைவாக கற்களை நட்டு வழிபடுதல்இசைக் கருவிகளை இசைத்தும்மது அருந்தியும்இலைகளால் ஆடை அணிந்தும் என்று தொடரப்பட்ட கி.மு500-க்கு முந்தைய பழக்கங்கள்தான் நடனக்கலையாக மெருகூட்டி செம்மைப்படுத்தின.
இந்தியாவில் வடக்கிலும்கூட திரா என்ற நடனக்கலை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்துள்ளது

தெய்யம் நடனம் போலவே நடன முறைபாடல்உடை அலங்கரிப்புவீரர்கள் என அனைத்தையும் ஒப்பாகக் கொண்டிருக்கும் திரா நடனம்வீரர்களை வழிபடுவது நம் நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரம் என்பதற்கு சான்றாகிறது.
கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் வீரர் வழிபாட்டுக்கென பழங்கால நடனமுறை ஒன்று வழக்கில் இருந்துள்ளது


பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் இருந்த அவ்வகை நடனக்கலை தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவிட்டது.வரலாற்றுச் சான்றுகளின்படி தெய்யம் நடனம் 1500ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் தோன்றியிருக்கிறதுகேரளத் தோட்டங்களில் பாடப்பட்டு வந்த பாடலே தெய்யம் நடனத்திலும் பாடுகின்ற பழக்கம் இருந்தது

எந்த இலக்கியங்களிலும் இது பதியப்படாததால் வாய்வழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாக இப்பாடல்கள் பதிவாகியுள்ளனபிற்காலத்தில் இவற்றின் சில பாடல்கள் பனையோலையில் பதியப்பட்டதுதெய்யம் நடனக் கலையை தற்போதும் தொடர்ந்து வருகின்றவர்களிடம் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிராமணரல்லாத சமூகத்தினர் குறிப்பாக,தென்னிந்தியாவில் தங்களுடைய மத நம்பிக்கைகளைப் புதிய வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டனர்புராணக் கதைகளும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றனசிறியகுடி வம்சாவழியினர் தங்களின் குடும்பச் சடங்குகளை மத வழிபாட்டோடு சேர்த்துக் கலவையாக்கி புதிய நம்பிக்கைகளைத் தங்கள் சமூகத்தினரிடையே ஏற்படுத்தினர்அவ்வழி வந்த தொண்டுக் கலைகளில் ஒன்றுதான் தெய்யம் நடனக்கலை.
குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான்மாவிலன்வேட்டுவன்,வேலன்மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர்

பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடுமிருக வழிபாடுவியாதிகள்நீத்தார் நினைவு கூறல்போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடுசர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.
கதகளிகளரிபேயாட்டு போன்ற நடனக்கலைகள் போலவே அலங்காரத்துடன்(தமிழ்நாட்டின் கூத்துதோல்பாவைக்கூத்து போலநிகழ்த்தப்படும் தெய்யம் நடனம் குறிப்பாக பகவதி மற்றும் விஷ்ணுமூர்த்திரக்தா சாமுண்டி போன்ற கடவுள்களை வழிபட ஆடப்படுகிறதுபகவதி கடவுளின் பெயரை ஊர்ப் பெயரோடு இணைத்து வணங்கப்படுவதால் முச்சிலோட்டு பகவதி,கன்னங்காட்டு பகவதி என ஊர்களின் பெயர் சேர்த்து எல்லா ஊர்களிலும் பரவலாக வணங்கப்படுகிறது.தெய்யம் நடனத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அலங்கரிப்பு.உடல் முழுவதும் வண்ணங்களால் வரைந்து தலைக்கு தனியே வடிவமைக்கப்பட்ட கிரீடமும் செய்யப்படுகிறதுவண்ணம் பூசிக்கொள்வதிலும் பல விதங்கள் உள்ளன

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தெய்யம் நடன வழக்கங்களின் அலங்காரம் இன்று சிதைந்து போகாமல் தொடரப்படுவது அதன் சிறப்பு.
தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளனஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.


வாத்தியக் கருவிகளின் இசையும் தெய்யம் நடனத்துக்கென உள்ள பிரத்யேகப் பாட்டும்நடனமும் இணைந்து உணர்வெழுச்சி மிகுந்த ஒரு நடனமாக அமைகிறது.தெய்யம் நடனத் திருவிழா வருடத்துக்கொரு முறை கேரளக் கிராமப்புறங்களில் சடங்காக நிகழ்த்தப்படுகிறது

ஒரு நாளில் தொடங்கும் நடனம் இரண்டு மூன்று என ஏழு நாட்கள் வரை கூட தொடர்வதுண்டு.தெய்யம் கேரளப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாகப் பெருமையோடு கூறப்பட்டாலும் இன்று மாறி வரும் சமூகத்திற்கேற்ப சிறிது சிறிதாக சிதைந்து வருகிறது.

பராமரிக்கவும்தொடரவும் ஆட்களில்லாமல் வெறும் வேர்களோடு மட்டும் நிற்கிற கேரளாவின் தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்குப் புத்துயிர் அளித்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.


- பொன்.வாசுதேவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname