Friday, April 23, 2010

உயிர்ப்பூ



ஏழாவது முறையாக நீங்கள் காதலிக்கத்
தொடங்குகிறீர்கள்

கடந்த முறைகளில் உங்கள் காதலின்
இறுதி ஊர்வலம் சிறப்பாகவே நடந்திருக்கிறது
இது ஒன்றும் புதிதல்ல
சக மனிதர்களுக்கும் நடப்பதுதான்

அங்க அசைவுகளில் லயிப்பதில்லை
மனசின் ஆழம்தான் எப்போதும் உங்களை
உள்ளிழுத்துக் கொண்டேயிருக்கிறது

சிறு நீரைத் தேக்கியிருக்கிற கிணறுகளில்
அதற்காகவே விழுந்து தடுமாறி எழுகிறீர்கள்

நொடிக்கொருமுறை காட்சியொடிக்கும்
இமை மூடி திறந்து விழிக்குஞ்சுகளில்
பிரியம் தளும்ப பேசுகிறீர்கள்

பிரபஞ்ச கண்டமாய் குரலில் ஆவல் மிதக்க
ஆகாச கங்கையாய்ப் பொழிகிறீர்கள்

மௌனத்தைப்பூசியபடி
பேச வார்த்தைளற்றுப் போகிறது
உங்களுக்கு ஒரு நேரத்தில்

பாசாங்கின் நுனியைக்
கையிலெடுத்துக் கொள்கிறீர்கள்
வெற்று வார்த்தைகள்
வறண்ட பிரியங்கள்
வேலைகளால் நிறைகிறது
உங்கள் வாழ்க்கை

தேங்கிய நீரில்
தன்னைப் பருக முயற்சித்து
இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
சிறு குருவியாய் திரிகிற உங்களை
அதீத யோசனையுடன்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.

- பொன்.வாசுதேவன்

16 comments:

  1. nice.....

    //
    தேங்கிய நீரில்
    தன்னைப் பருக முயற்சித்து
    இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
    சிறு குருவியாய் திரிகிற உங்களை
    அதீத யோசனையுடன்
    உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.
    //

    :)

    ReplyDelete
  2. தேங்கிய நீரில்
    தன்னைப் பருக முயற்சித்து
    இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
    சிறு குருவியாய் திரிகிற உங்களை
    அதீத யோசனையுடன்
    உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.

    தன்னை பருக முயற்சித்து முடியாத குருவி
    அருமை அருமை

    ReplyDelete
  3. கவிதை ரொம்ப நன்றாக இருக்கிறது, ரொம்ப ரொம்ப ரசித்தேன், அருமை.

    ReplyDelete
  4. நிறைய ரசித்தேன்...நல்லதொரு கவிதை....

    ReplyDelete
  5. ரொம்ப பிடிச்சிருக்கு வாசு.

    கடைசி பாரா அற்புதம்.

    ReplyDelete
  6. கவிதை மனசுக்குள். ரசனையான வரிகளில்.... காதல் உற்றுப்பார்க்குது.

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல கவிதை. நகர காதல்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  8. //வார்த்தைளற்றுப் //

    அருமை.

    வார்த்தைகளற்றுப் ??

    ReplyDelete
  9. //அதீத யோசனையுடன்
    உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.//

    அடங்.. இருக்குதுங்களா இது.. எங்க இருக்குன்னு சொல்லுங்க நானும் அத திரும்பி முறைக்கணும்...

    ReplyDelete
  10. super ah irukkkunga Vaasu!!

    ReplyDelete
  11. ஏழாவது முறையாக நீங்கள் காதலிக்கத்
    தொடங்குகிறீர்கள்
    anna intha oru variye kavithaiku muguntha azhaguna,nice line

    anbudan
    ursularagav

    ReplyDelete
  12. Was musing on how every love is a form of self love when I chanced on this poem... Beautiful. Speaks volumes. But I love the unsaid more than what was said.

    regards,
    Tharangini.

    ReplyDelete
  13. கடைசி பாரா காட்சியாகி மறைந்தது. அருமை.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname