இந்தியா டுடே 2011 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மீண்டும் மனுஷ்ய புத்திரன்
இந்தியா டுடே வெளியிடும் தமிழகத்தின் 10 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மனுஷ்ய புத்திரன் பெயர் இடம்பெற்றுள்ளது.. இதுபற்றிய இந்தியா டுடேயின் குறிப்பு இது.
தமிழ் மன்னர்கள்
தமிழகத்தை மைய அச்சாக கொண்டு உலகளாவிய அளவில் சாதித்துவரும் ஜாம்பவான்களின் பட்டியல் இது.
இந்த ஆண்டு இந்தியா டுடேவின் பலம் மிக்கவர்கள் பட்டியலில் தமிழக பலவான்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் டி.வி.எஸ் மோட்டார் வேணு ஸ்ரீனிவாசன் முதலிடத்தில் இருக்கிறார். முருகப்பா குழுமத்தின் ஏ. வெள்ளையன் அடுத்த இடத்தைப் பெற்றிருகிறார். தந்தைக்கும் தோள்கொடுக்கும் அப்ப்பல்லோ குழுமத்தின் ப்ரீத்தா ரெட்டி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். உலக சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். தமிழக சிஐஐ யின் முன்னால் தலைவியும் சந்திரா குழும தலைவருமான நந்தினி ரங்க சாமி அடுத்த இடம் பெற்றிருக்கிறார். புது வரவாக நடிகர் விஜய் வந்திருக்கிறார். வாசன் ஐ கேர் நிறுவனத்தின் ஏ.எம் அருண், முன்னால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்’ நக்கீரன் கோபால், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் இதில் வலம் வருகிறார்கள்.
மனுஷ்ய புத்திரன்
42. கவிஞர், பதிப்பாளர், உயிர்மை
எழுதிச் செல்லும் நீருற்று
ஏனெனில்: இந்த வருடம் 50க்கும் மேற்பட்ட புத்த்கங்களை வெளியிட்ட இவரது பதிப்பகம் ஒரு சிறிய அணியை வைத்துக்கொண்டே பெரும் நிறுவன பதிப்பாளர்களோடு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்திருகிறது.
ஏனெனில்: ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 கவிதைகளுக்கும் அதிகமாக கவித்துவம் குறையாமல் எழுதும் அளவுக்கு படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கிறார்.
ஏனெனில்: மின் வெளியில் குவிந்து கிடக்கும் ’நானும் ரவுடிதான்’ ரக கவிதைகளுக்கு நடுவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துப் ப்போடும் மனுஷ்ய புத்திரனின் வரிகளே இணையத்தில் கவிதைக்கு மீட்சி கொடுக்கிறது.
ஏனெனில்: சினிமாவுக்கு பாடல் எழுதுவதற்காக இடதுசாரி இணைய தளங்களின் விமர்சத்திற்கு ஆளானாலும் இவரது சினிமா படைப்புகளில் கவித்துவம் இல்லாமல் இல்லை.
ஏனெனில்: கவிதையை வார்த்தை ஜாலத்தில் இருந்தும் படிமங்களில் இருந்தும் விடுவிக்கும் சூட்சுமத்தை வெளிக்காட்டும் சமகால கவிஞர் இவர்.
தனி ஆற்றல்: முகம் தெரியாதவர்களின் துயரங்களைக் கரைக்கும் சக்தி. கவிதை மூலமாகவும், நேரிலும், தொலை பேசியிலும்; தான் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட
சமீபத்தில் மகிழ்ச்சி: தனது ’இதற்கு முன்பும் இதற்கு பிறகும்’ கவிதை புத்தக விழாவில் தானாக முன் வந்து நூல்குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது.
பெரிய திருப்தி: ரசிகமணி டி.கே.சி கடிதங்களின் முழுத் தொகுப்பை சிறப்பாக கொண்டு வந்தது.
நன்றி: இந்தியா டுடே
ஏப்ரல் 13, 2011
வாழ்த்துகள் மனுஷ்ய புத்திரனுக்கு
வாழ்த்துகள் மனுஷ்ய புத்திரனுக்கு
ReplyDelete