Wednesday, February 23, 2011

புகை யுகம்




கையில் வைத்திருந்த
எரிந்து கொண்டிருக்கும் வெண் சுருட்டை
வடிகட்டிப் பொருத்தி தரையில் படும்படியாக
நெடுக்கு வாக்கில் சுவரில் வைத்தான்

வெண்சுருட்டின் வாய்
நெருப்பினோடு புகைந்தபடியிருந்தது
புகை எழுதலில் மங்கிப்போன அறை
அவனுக்கு ஒரு மாயச் சித்திரத்தைத் தந்தது

அச்சித்திரத்தின் உருவங்களுக்கு
வணக்கம் கூறியபடியே அவற்றோடு நட்பு பாராட்டினான்
இது மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது
வணங்குதலில் இருந்துதான் வாழ்க்கை கழிகிறது

தெளிவற்ற சித்திரங்களின் மனவறைக்குள்
பிரவேசிக்க அவனுக்கு சிறு தயக்கம் இருந்தது

காற்றின் வீச்சு இல்லாத அமைதியான அறை
அவனுக்கு சாதகமாயிருந்தது
குழைந்தபடியிருந்த புகைச் சித்திரங்களுடன்
மெல்ல உரையாடத் துவங்கினான்

பரிச்சயமில்லாத ஒரு இருட்பிரகாசத்திற்கு
அவனை அவை அழைத்துச் சென்றன
அவ்வுலகம் அவனைச் சுண்டியிழுக்கும்
கவர்ச்சி கொண்டதாய் இருந்தது
அதில் அவன் தன்னையிழந்தான்
அவனது பாவங்களுக்கான மன்னிப்பை
அங்கே கண்டடைந்ததான்

ஒற்றைப்புள்ளியாய் நெருப்பு
உற்றுப்பார்த்தபடியிருந்தது அவனை

முட்டாள்தனமானதும்
கட்டுப்பாடற்றதுமான வெறித்தனத்தோடு
மங்கலான தெளிவற்ற முகங்கொண்ட
அச்சித்திர உருவங்களோடு
வாழ்க்கை முழுதும் கழிக்க விரும்பினான்

உருவமற்ற கனத்த தன்னுடலைக் கொண்டு
சன்னல் வழியாக உள் நுழைகிறது காற்று
சன்னலோரத்தில் வெளியேறத் தொடங்கின
புகைச் சித்திர உருவங்கள்

அறை தெளிகிறது
எரிந்து முடிந்து சாம்பலாகியிருந்தது வெண் சுருட்டு.
அவன் உறங்கிப்போயிருந்தான்.
*


பொன்.வாசுதேவன்

10 comments:

  1. இப் படிமக்கவிதை... மனதில் வேறொரு சித்தரத்தை கட்டவழ்க்கிறது

    (என்ன பண்ணறது.. இலக்கிய வாதிகளுக்கு இப்படிதான் பின்னூட்டமிடவேண்டியிருக்கு)

    நல்ல மப்ல ஒரு கடைசி தம் அட்ச்சவொடனே மட்டையாவோமே அத தானே சொல்லறீங்க.. எப்டி ஸ்டடியா ஒக்காந்து எய்தினீங்க?

    ReplyDelete
  2. ’சித்தரத்தை’ அல்ல ’சித்திரத்தை’ :)

    ReplyDelete
  3. http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html

    ReplyDelete
  4. \\ஒற்றைப்புள்ளியாய் நெருப்பு
    உற்றுப்பார்த்தபடியிருந்தது அவனை\\

    அந்த நெருப்பு அவனை எதுவாகவும் ஆக்கலாம். சாம்பலாகக்கூட

    ReplyDelete
  5. எனக்கு தெரிந்து நீங்கள் புகைப்பது இல்லையே?

    சரி..புகைப்பது எனக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால், எப்படி?

    என்னை அல்லது புகைப்பவனை அல்லது புகையை வரைந்தீர்கள்?

    எனக்கு தெரிந்து நீங்கள் புகைப்பது இல்லையே?

    சரி..

    உருவமற்ற கனத்த என்னுடலைக் கொண்டு
    சன்னல் வழியாக வெளி நுழைவது எப்படி? (வெளி நுழைவது..ஹ..கெளப்பிட்டடா ராஜா)

    எனக்கு தெரிந்து..

    ReplyDelete
  6. Arumaiya ezhuthi irukkinga... padamum kavithai solluthu.

    ReplyDelete
  7. சித்தபுக்கு கவித புரியல

    வெண்சுருட்டு தான் படிமம்

    மங்கிபோன அறைதான் உலகம்

    நாமும் நம் உலகை அப்படிதான் நம்புகிறோம்...

    கரீட்டா புலவரே... ???

    ReplyDelete
  8. //புகை எழுதலில் மங்கிப்போன அறை
    அவனுக்கு ஒரு மாயச் சித்திரத்தைத் தந்தது

    அச்சித்திரத்தின் உருவங்களுக்கு
    வணக்கம் கூறியபடியே அவற்றோடு நட்பு பாராட்டினான்//

    புகையில் மாய சித்திரம் தோன்றும் அறிவோம் மேகங்களில் கண்டதுண்டு.

    //அவற்றோடு நட்பு பாராட்டினான் //

    கற்பனையின் உச்சம் அந்த பாத்திரத்தை படைத்த பிரம்மாவாய்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname