Friday, December 25, 2009

உக்காந்து யோசிச்சது & நகுலன் வீட்டில் யாருமில்லை, அகநாழிகை மற்றும் சில

அகநாழிகை டிசம்பர் 2009 பற்றிய நண்பர்களின் பதிவுகள்

உக்கார்ந்து யோசிச்சது (25-12-09)..!!! - கார்த்திகைப்பாண்டியன்

குறிப்பும் முன்னொழுக்கமும் என்ற பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் "அகநாழிகை"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த அன்பர்கள்அ.மு.செய்யதுவும், அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். நிலாரசிகனின் "சங்கமித்திரை" என்னும் கதையும், நண்பர் உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.

"அமுதமும் அமைதியும்" என்ற பாவண்ணனின் கட்டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு. அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. "காலச்சுவடு" கண்ணன் மற்றும் "உயிர் எழுத்து" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
000
அகநாழிகை said...

கார்த்திகைபாண்டியன்,
அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி. புதிய எழுத்தாளராக அறிமுகம் பெற்றிருக்கும் சாரதா என்பவர் ‘அமிதவர்ஷினி அம்மா‘ என்ற பதிவர் என்பது கூடுதல் தகவல். பதிவர்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு அகநாழிகையில் முன்னுரிமை உண்டு. பதிவர்களின் தொகுப்புகளை வெளியிடுவதற்கும் முன்னுரிமை உண்டு.

- பொன்.வாசுதேவன்

11 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வலைப்பூவின் புதிய வடிவமைப்பு அருமை.

    ReplyDelete
  5. மனுஷ்யபுத்திரன் பேட்டி பிரமாதம்..

    2 issue சூப்பராவே வந்திருக்கு வாசு

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் வாசு!

    நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி வாசு !!!!

    புத்தக கண்காட்சிக்காக ஜனவரியில் சென்னை வருகிறேன்.உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது.

    ReplyDelete
  8. உங்களின் பகிர்வுக்கு என் நன்றியும் ....வெளியீடுகளுக்கு என் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  9. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் வாசு..

    ReplyDelete
  10. வாழ்த்துகள் வாசு. பதிவர்களுக்கு முன்னுரிமை என்பது கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு...

    ReplyDelete
  11. அனைவருக்கும்
    உளங்கனிந்த வாழ்த்துக்கள்,
    பதிவர்களை முன்னுரிமைபடுத்தியது
    மகிழ்ச்சி..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname