Tuesday, November 24, 2009

ஆயுத எழுத்து ( ‘உயிரோசை’ யில் வெளியான கட்டுரை)

ஆயுத எழுத்து ………… பொன்.வாசுதேவன்

நன்றி : உயிரோசை இணைய இதழ்

பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பின்னர் பெரும்பான்மையினரான 153 ஐக்கிய நாடுகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கான கால அட்டவணை ஏற்படுத்துவதற்கான உறுதியான நம்பிக்கை அளித்துள்ளனர். ஆயுதங்கள் பரிமாற்றத்திற்கான பொது உச்ச நடைமுறைகளுக்கும் இது உறுதியளிப்பதாக உள்ளது. தற்போது உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் பெரும்பான்மை ஆயுத வர்த்தகர்கள் உலகளாவிய ஆயுத ஒப்பந்தத்தை ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஆயுத வர்த்தகத்தில் முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய குடியரசு,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகளின் இத்திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன.ஐக்கிய நாடுகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், பஹ்ரைன், பெலாரஸ், சீனா,க்யூபா, எகிப்து, ஈரான், குவைத், லிபியா, நிகராகுவா, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா மற்றும் யேமன் ஆகிய 19 நாடுகளும் ஓட்டளிப்பில் பங்கேற்கவில்லை. எனினும் அவர்களும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே மட்டுமே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.

தீர்மானங்களின் மீதான விவாதத்தின்போது, ஆயுத வர்த்தக ஒப்பந்தம் பன்னாட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களின்படியும் இருக்க வேண்டுமென இதில் பங்கேற்ற நாடுகள் வலியுறுத்தின.

ஆயுத கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கூட்டணியாக முனைப்புடன் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளன. உலக ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகளின் வரலாற்று நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் இந்த ஒப்பந்தத்தை முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும்.மேலும், ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதி நிலை வரை அனைத்து நாடுகளும் தொடர்ந்து உத்வேகமளிக்க வேண்டியது அவசியம் என்றும் தன்னார்வ குழுக்கள் எச்சரித்துள்ளன. ஒப்பந்தத்தில் நம்பிக்கையற்ற குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான நாடுகளால் ஆயுத வர்த்தக உடன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளன.

"ஆயுத வர்த்தகத்தின் விளைவாக பரவலாக  ஏற்படும் உயிரிழப்பு, காயங்கள் மற்றும் மனித உரிமை குற்றங்கள் போன்றவற்றிற்கான பொறுப்புகளை மரபுவழி ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றாக வேண்டும்" என்கிறார் சிறு ஆயுதங்களுக்கான பன்னாட்டு செயல் கட்டமைப்பின் இயக்குநர் ரெபேக்கா பீட்டர்ஸ். மேலும், "இக்கொடிய ஆயுத வர்த்தகத்தின் மீது கொண்டு வரப்பட்டுள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட முன் வருவதாக அரசுகள் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்கிறார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தொடர் கூட்டங்களின் இறுதியான முடிவுகள் 2012ல் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆயுத பரிமாற்றத்தை நிறுத்தவும், தொடர்ச்சியாக நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை தடுக்கவும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பொது ஒழுங்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" என்கிறார் பன்னாட்டு மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆயுத கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பிரையன் வுட்."இவ்விதிமுறைகளை ஏற்படுத்துவதன் வாயிலாக நூறாயிரக்கானவர்களின் உயிர்களையும், கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள பன்னாட்டு ஆயுத பரிவர்த்தனை பொருட்டு விளையும் தீங்குகளுக்கு மாறாக ஏற்படும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவை குறித்த முக்கிய விவரங்கள் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுத புழக்கத்தின் விளைவாக உலகின் ஏழ்மையான பகுதிகளில் ஏற்படும் துன்பங்கள், இறப்பு போன்றவை நெடுங்காலமாக தொடர்ந்து வருவது வருத்ததிற்குரியது. ஆண்டிற்கு நூறாயிரக்கணக்கான மக்கள் ஆயுத வன்முறையின் காரணமாக குற்றவாளிகள் கையில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.இவ்உரிமை மீறல்களை நிகழ்த்துவதன் வாயிலாக இனஅழிவுகளும், வாழ்வு நிலையும் பெரிதும் பாதிப்புள்ளாகிறது என்று தெரிவிக்கும் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனர் நிறுவனத்தின் அன்னா மெக்டொனால்ட், "ஆயுத வர்த்தகத்தின் மீதான உலகளாவிய தரத்தை செம்மைப்படுத்துவதன் வழியே உலகெங்கும் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்து வரும் மக்களை பாதுகாக்க இயலும்"என்கிறார்.

மனித உரிமை மீறல்களுக்கும், எரிபொருள் தொடர்பான சச்சரவுகளுக்கும்,வறுமைக்கும் காரணியாக இருந்து வருகிற உலகளாவிய மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை நிறுத்த உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை பொது ஓழுங்கு விதிகள் அவசியம்.

அனைத்து நாடுகளும் யுத்த தளவாடங்களிலிருந்தோ, இராணுவ வெடிமருந்துச் சாலை மூலமாகவோ நடத்தப்படும் மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை அனுமதிப்பதை பின்வரும் நிலைகளில் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மரபுவழி ஆயுத பரிவர்த்தனையானது பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் நிகழ்வுகளுக்கோ அல்லது மனித நேயத்திற்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்த அல்லது பயன் படுத்தக்கூடும் என்ற சந்தேகம் எழும் பட்சத்தில் ஆயுத பரிவர்த்தனை அனுமதிக்கப் படக்கூடாது.

தொடர் வளர்ச்சிக்கு பாதகமான தாக்கத்தையோ, ஊழல் ஒழுங்கீனங்களுக்கு துணைபோகும் என்றோ கருதப்பட்டால் ஆயுதப் பரிவர்த்தனை தடை செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அல்லது நடைமுறையில் இருக்கும் ஆயுத ஒப்பந்தங்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலோ ஆயுதம் தரித்த சச்சரவை மோசமாக்கும் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட வேண்டும்.

சமகால வன்முறை குற்றங்களுக்கு ஆதரவளிப்பதான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஏற்படும் மரபுவழி ஆயுத பரிவர்த்தனைக்கு அனுமதிக்க கூடாது.

தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்திற்கிடமான ஆயுத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது.

ஆயுதப் புழக்கத்தின் மீதான கட்டுப்பாடு என்பது முழுமையாக ஆயுதத் தடை விதிப்பது அல்ல. சட்டத்திற்கு புறம்பான குற்ற நிகழ்வுகளுக்கும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்துவோரின் கைகளில் ஆயுதங்கள் கிடைக்காமல் செய்ய சட்டமியற்றி ஆயுத பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்துவதாகும்.நிலச்சுரங்கங்கள் போன்ற சில வகை ஆயுதங்கள் மற்றும் போருக்கு உபயோகப்படுத்தும் ஆயுதங்கள் மீது இக்கட்டுப்பாடு கிடையாது. பன்னாட்டு ஆயுத சட்டத்திற்குட்பட்டு தற்காப்புக்காகவும், சட்ட அமலாக்கத்திற்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை.என்றாலும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், குடிமக்கள் நலன் கருதியும் இவ்வகை தற்காப்பு ஆயுத உபயோகத்திற்கான அனுமதி நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு ஆயுத சட்டங்கள் மீறப்படாமல் கட்டுக்குள் வைக்க ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மனித உரிமை மீறல், மனிதநேயம் ஆகியவற்றின் பன்னாட்டு சட்ட விதிகளின் அடிப்படையில் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஆயுத பரிவர்த்தனையின் மீது செம்மைப் படுத்தப்பட்ட உலகளாவிய பொது விதிகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இவ்ஒப்பந்தத்தின்படி உலக நாடுகளில் மனித உரிமை மீறல் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு ஆயுதப் பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்க முடியும்.

6 comments:

  1. ஆயுதக் குறைப்பு மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு பேசி வந்தாலும் அத்துமீறல்கள் நடந்தபடியே தான் உள்ளன. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த அமைப்பின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை

    ReplyDelete
  2. எல்லாம் நல்லபடியாக நடந்தால் நல்லது. இந்த வகையான அத்துமீறகள் நடந்துக்கொண்டுதான் இருக்கு. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் துணையாகவும் இருக்கு என்பதுதான் ஆச்சரியம்... பகிர்வுக்கு நன்றி வாசு

    ReplyDelete
  3. உயிரோசையிலேயே படித்தோம்.. ஆயுதம் பற்றிய கூர்மையான கட்டுரை

    ReplyDelete
  4. தரமான இடுகை வாசு சார்.Very informative !!

    இதைப்படித்ததும் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில்
    மாதவன்,பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் நினைவுக்கு வந்தது.

    "உலகில் ஏதோ ஒரு இடத்தில் யுத்தம் நீடிப்பதில் வியாபார நோக்கமிருக்கிறது."

    "உலகிலே அமைதியை அதிகம் விரும்பும் நாடு ஜப்பான்.ஆனால் அவர்கள் தான்
    அதிகமாக துப்பாக்கியை உற்பத்தி செய்கின்றனர்"

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname