Sunday, June 12, 2011

நானறிந்த நீ



பிரியத்தைச் சொல்லிய நீ
கட்டிக் கொண்ட நீ
தோளில் சாய்ந்த நீ

சட்டைப் பொத்தான்களைத் திருகியபடி
சாய்ந்து மார்பில் கடிக்கின்ற நீ
மார்புகளை உறிஞ்சுகையில் முனகுகின்ற நீ
முயங்கும் பொழுது தலைமுடியைப்
பற்றிக் கொள்கிற நீ
கண் மூடி ஆராதித்து ரசிக்கின்ற நீ

மடியில் படுக்க வைத்துக் கொள்கிற நீ
தயிர் சாதம் ஊட்டி விடுகின்ற நீ
கோபித்துக் கொள்கிற நீ
சண்டையிடுகிற நீ

தொடையில் திருகும் நீ
வாதம் செய்கிற நீ
அழுகிற நீ
மன்னிப்பு கேட்கிற நீ
சமாதானமடைகின்ற நீ

வலி உணர்கின்ற நீ
குழந்தையாகின்ற நீ
புத்திசாலியாய் இருக்கின்ற நீ

எழுதுகின்ற நீ
விமர்சனம் செய்கிற நீ
குழந்தையை ரசிக்கிற நீ
பாடம் சொல்லிக் கொடுக்கிற நீ

சமையல் செய்கிற நீ
துணி துவைக்கின்ற நீ
தூங்குகின்ற நீ

எனக்குத் தெரிந்த நீ
எனக்குத் தெரியாத நீ

*

பொன்.வாசுதேவன்

5 comments:

  1. //எனக்குத் தெரிந்த நீ
    எனக்குத் தெரியாத நீ// நன்றாக இருக்கிறது !

    ReplyDelete
  2. AnonymousJuly 02, 2011

    எனக்கான நீ?

    ReplyDelete
  3. உன் நீயை, நீட்சி அடையாமல் நிர்வகிக்கும் நீயாகவே இருக்கின்றாய். நல்ல அன்பை உட்கொண்ட கவிதை,

    ReplyDelete
  4. AnonymousJuly 29, 2011

    எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்த நீ!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname